தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!இதையெல்லாம் செய்ய கூடாது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் லோக்சபா தேர்தல் குறித்த தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போலவே, இந்த ஆண்டும், நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.

இதில், முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டமாக 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. முன்று கட்டங்களாக 12 மாநிலங்கள் 94 தொகுதிகளிலும், நான்கு கட்டமாக 10 மாநிலங்கள் 96 தொகுதிகளிலும், ஐந்து கட்டமாக 8 மாநிலங்கள் 49 தொகுதிகளிலும்,ஆறு கட்டமாக 7 மாநிலங்கள் 57 தொகுதிகளிலும், ஏழு கட்டமாக 8 மாநிலங்கள் 57 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதன்படி, வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கும், வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி என மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.
மேலும், “சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களானது நாளை (20.03.2024) முதல் 27.03.2024 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) ஆகிய நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கீழ்க்கண்ட அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும்.
நாளை முதல் வரும் 27ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 28ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மனுவை திரும்பப்பெறுவதற்கு மார்ச் 30ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவர். வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3.00 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை” என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications