குடிமகன்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாத தனியரசு.! வச்சாரு பாருங்க சூப்பர் கோரிக்கை ஒன்னு
சென்னை: தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் மதுக்கடைகளை ஏற்படுத்த வேண்டும் என எம்எல்ஏ தனியரசு விடுத்த கோரிக்கையால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற வேளாண்துறை மானிய கோரிக்கை மீது விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

மேலும் அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு முண்டியடித்து கொண்டு டிக்கெட் வாங்குவது போல, மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக உள்ளது.
எனவே மதுப்பிரியர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை அமைக்க வேண்டும் என மிக சீரியஸாக கோரிக்கையை முன்வைத்தார். மேலும் பேசிய தனியரசு தமிழக முதல்வரை புகழந்தார்.
வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டி பார்த்தனர். ஆனால் எட்டிப்பார்த்த வட நாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார் என்றார் தனியரசு. மேலும் ஏழை விவசாயிகள், விவசாயிகளின் செல்லப்பிள்ளையாக எடப்பாடி பழனிசாமி இருப்பதாக புகழ்ந்து பேசினார்.
தமிழகத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரை கெடுத்து குட்டிசுவராக்கும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதியாக உள்ள தனியரசு எம்எல்ஏ, நடமாடும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications