Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடுமையான ஆக்சன் எடுப்போம்.. வேண்டுமென்றே செய்கிறீர்களா? சம்பளதாரர்களுக்கு IT துறை வைத்த செக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி செலுத்தும் பல ஆயிரம் ஊழியர்களுக்கு வருமான வரித்துறை சமீபத்தில் அனுப்பிய மின்னஞ்சல்களில் கடுமையான கேள்விகளை கேட்டு உள்ளது. இது தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்கும்படி அல்லது திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யம்படி மெயிலில் கோரி உள்ளது.

வருமான வரித்துறை பல்வேறு நபர்களுக்கு இன்று காலை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவறான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கும் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

income tax ITR

தாக்கல் செய்யப்பட்ட வரிக் கணக்கிற்கும் (ITR) நிறுவனங்களால் வழங்கப்பட்ட படிவம் 16-க்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் குறித்து எச்சரித்துள்ளன. இந்தச் செய்தி வரி செலுத்துவோர் மத்தியில் கவலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

வருமான வரி கணக்கு ரிட்டர்ன்

எங்களுடைய மெயிலுக்கு உடனே பதில் அளியுங்கள். அல்லது உங்கள் வருமான வரி கணக்கு ரிட்டர்னை திருத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் வேண்டுமென்றே இந்த தவறை செய்ததாக கருத்தில் கொள்வோம். உடனே நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ITR-இல் கோரப்பட்ட விலக்குகள் அல்லது பிடித்தங்களுக்கும், நிறுவனத்தால் கணக்கு காட்டப்பட்ட தொகைகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க முரண்பாடு இருக்கும்போது இத்தகைய எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகின்றன.

இந்த எச்சரிக்கை கடுமையான தொனியைக் கொண்டிருந்தாலும், இதன் நோக்கம் தண்டனைக்குரியது அல்ல என்று வரி வல்லுநர்கள் விளக்கினர். சம்பளதாரர்கள் உடனே பதில் அளிக்க வேண்டும். அவர்கள் உடனே திருத்தப்பட்ட வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்றே இந்த கடுமையான மெயில் அனுப்பப்படுகிறது. மற்றபடி அவர்கள் மீது ஆக்சன் எடுக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

கடுமையான நோட்டீஸ்

வருமான வரி கணக்குகளில் முறைகேடாக விலக்கு கோருபவர்களைக் குறிவைத்து, நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை பல ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

சிலர், சிறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான விலக்குகள் கேட்டு உள்ளனர். இவை கண்டிப்பாக விசாரிக்கப்படும். அதேபோல் சுகாதார காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A)), கல்வி மற்றும் வீட்டுக்கடன் மீதான வட்டி, மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான விலக்குகளும் (பிரிவு 80E, 80EE, 80EEB) இந்த நடவடிக்கையின் கீழ் விசாரணை செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. இது குறித்து வரி செலுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும்.

மோசடியான உரிமைகோரல்களுக்கு எதிராக அபராதம் மற்றும் வழக்குத் தொடருவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது. சிஏக்களை வைத்து பொய்யாக வருமான வரி தாக்கல் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிஜிட்டல் பதிவுகள் உட்பட முக்கியமான ஆதாரங்களை கேட்டு விசாரணை செய்ய உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸ்களில், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைச் சரிபார்த்துக் கொள்ளவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தவறுகள் இருந்தால், அவற்றை உடனடியாகத் திருத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வரி தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரி செலுத்துவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும். மேலும், வரி ஏய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படும். சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+