பாஜக முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில்.. திமுக, மதிமுக, மநீம பிரமுகர்கள் வீடுகளில் ஐடி சோதனை
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் திமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
Recommended Video

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஐடி ரெய்டு நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகர் வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மதிமுக தலைவர்
இதேபோல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ், வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். திருப்பூர் லட்சுமி நகரிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் சந்திரசேகர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

முருகன் போட்டி
தாராபுரம் தனி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அந்த கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இங்கு திமுக, பாஜகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது. திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சி 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.

ஒரே கூட்டணி
இது போன்ற சூழ்நிலையில்தான் திமுக மற்றும் மதிமுக ஆகிய ஒரே கூட்டணியைச் சேர்ந்த இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் எதிரணியிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் வீடுகளில் நடத்தப்படும் இந்த வருமானவரித்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ரெய்டு
கடந்த லோக்சபா தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். பாஜக சார்பில் அப்போது மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். அப்போதும் கனிமொழி தங்கியிருந்த இடத்தில் பணம் இருக்கிறதா என்று ஐடி அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications