சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் 3-வது முறையாக தேசியக் கொடியேற்றினார் முதல்வர் மு.க ஸ்டாலின்
சென்னை: இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வணக்கம் செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணி அளவில் முதல்வர் மு.க மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மக்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

இதன்பிறகு முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டர். தொடர்ந்து கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடி ஏற்றும் இடத்துக்கு வந்த முதல்வர் சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தி வருகிறார். விழா மேடையில், 'தகைசால் தமிழர்' விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
அதேபோல், டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை கொத்தளத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications