இந்தியா நடுநிலையாக இருக்கவே வேண்டியதில்லை.. டிரம்ப்பை அருகில் வைத்துக்கொண்டு மோடி போட்ட போடு.. அட
சென்னை: இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பின் போது, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பேசப்பட்டது.
இந்தியா இந்த விவகாரத்தில் அணிசேரா நாடாக இல்லை.. இந்தியா நடுநிலையாக செயல்படும் திட்டத்தில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியா நடுநிலை பக்கம் இல்லை.. ஆனால் அமைதியின் பக்கம் இருக்கிறது. இந்த போரை முடிவிற்கு கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். அதை பாராட்டுகிறோம், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ரஷ்யா - அமெரிக்கா பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் நேற்று தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர்.
இந்த போன் கால் சிறப்பாக இருந்தது.. நீண்ட நேரம் பேசினோம்.. பயனுள்ளதாக இருந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போன் கால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்ததாகவும், "இருவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று புடினும் டிரம்பும் ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்யா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இருவரும் ரஷ்ய - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் பேசியது இதில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர், ஏஐ தொழில்நுட்பம், மத்திய கிழக்கில் நடக்கும் பிரச்சனைகள் என்று பல விஷயங்கள் பற்றி இதில் பேசி உள்ளனர். இரண்டு தரப்பும் உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க இரண்டு தரப்பும் இந்த போன் காலில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
மோடி சந்திப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். அதை பாராட்டுகிறோம், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியா இந்த விவகாரத்தில் அணிசேரா நாடாக இல்லை.. இந்தியா நடுநிலையாக செயல்படும் திட்டத்தில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியா நடுநிலை பக்கம் இல்லை.. ஆனால் அமைதியின் பக்கம் இருக்கிறது.
போரை நிறுத்துவதில் இந்தியா தீவிரமாக இருக்கிறது. இரண்டு நாடுகளும் அமைதிக்கு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ளார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி ஜாயின்ட் ஆண்ட்ரூஸ் தளத்தில் வந்திறங்கியபோது புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு வரவேற்பை அளித்தனர்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இன்று பிரதமர் மோடி அமெரிக்க NSA மைக்கேல் வால்ட்ஸ், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் DOGE தலைவர் எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார். முன்னதாக நேற்று, பிரதமர் மோடி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்டை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.












Click it and Unblock the Notifications