தேர்வு கிடையாது.. 10ம் வகுப்பு மார்க் போதும்.. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் 2,000 பணியிடங்கள்
சென்னை: இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பொதுத்துறை அமைப்பாக தபால் துறை உள்ளது. நாடு முழுவதும் பல ஆயிரம் ஊழியர்கள் அஞ்சல் துறையில் பணியாற்றுகிறார்கள்.

மத்திய அரசு பணி என்பதால், அஞ்சல் துறையில் பணி செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கும். இதனால், மத்திய அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. பொதுவாக அரசு தேர்வுகளுக்கு பணிக்கு சேர போட்டி தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அதேநேரத்தில் சில பணியிடங்கள் பள்ளி மதிப்பெண் அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன.
தமிழகத்தில் 2002 பணியிடங்கள்
அந்த வகையில்தான் தபால் துறையில் உள்ள கிராமின் டாக் சேவகர்கள் பிரிவு பணியிடங்கள் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றன. அதாவது தேர்வு எதுவும் இன்றி பத்தாம் வகுப்பில் பெற்ற மார்க் வைத்து ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 2002 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.
18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணிதம், ஆங்கிலம் ஒரு பாடமாக எடுத்து படித்து இருப்பது அவசியம். அதுபோக, அடிப்படை கணினி அறிவு, சைக்கிள் ஒட்டும் திறன் ஆகியவையும் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளவும். indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்படும் அடிப்படை விவரங்களை அளிக்க வேண்டும். தொடர்ந்து New Candidate Registration என்பதை கிளிக் செய்ய வேண்டும். மொபைல் எண், இமெயில் முகவரி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்பிறகு விண்ணப்ப பதிவின் போது, கல்வி சான்று விவரங்கள், விண்ணப்பிக்கும் மண்டல விவரங்கள் விருப்பப்படும் தபால் பிரிவு ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றையும் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ் தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
விண்ணப்பிக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை கிளை உதவி போஸ்ட் மாஸ்டர், ஜிடிஎஸ் பணிகளுக்கு மாதம் ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளமாக கிடைக்கும்.
பிபிஎம் பணிகளுக்கு ரூ. 12,000 முதல் ரூ. 29,380 வரையில் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். தற்போது விண்ணப்ப பதிவு ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க அவகாசம் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதி விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். மெரிட் லிஸ்ட் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகும்.












Click it and Unblock the Notifications