"பாரதிய" என்று மாறுகிறது "இந்திய" சட்டங்கள்.. ஆயுள் தண்டனை விதியில் கூட மாற்றம்! அமித் ஷா ஷாக் மசோதா
சென்னை: இந்திய தண்டனை சட்டம் அதாவது ஐபிசியை மொத்தமாக மாற்றி புதிய தண்டனை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த தண்டனை சட்டத்தில் ஆயுள் தண்டனைக்கான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டம் பெயரிடப்பட்டு உள்ளது. அதாவது இந்தியா என்பதே நீக்கப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற பெயரில் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது .

இப்போது நாம் பின்பற்றும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. ஆனாலும் இதில் பல மாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையத்தில் தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த மசோதாவை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். அவரின் இந்த மசோதா கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இதில் பல புதிய சட்டங்களும், விதிகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.
3 முக்கிய மாற்றம்: இந்தியாவில் போலீஸ், கோர்ட் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் கடைபிடிக்கப்பட்டு வரும் மொத்த தண்டனை சட்டமும் இதன் மூலம் மாற்றப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா ஆகியவை இனி கடைபிடிக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த மசோதாக்கள் அறிவித்துள்ளன.
ஆயுள் தண்டனை: இந்த தண்டனை சட்டத்தில் ஆயுள் தண்டனைக்கான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள ஐபிசி சட்டம் 53படி ஆயுள் தண்டனை என்றால் "வாழ்நாள் முழுவதும் சிறை" என்ற சொற்றொடர், மரணம் வரை சிறையில் அடைப்பதைக் குறிக்கிறது. ஆனால் ஆளும் ஆட்சியாளர்களால் தண்டனைக் குறைப்பு, நிவாரணம் அல்லது தண்டனை இடைநீக்கம், விடுதலையை செய்ய முடியும். அதேபோல் பல்வேறு பிரிவுகள் வெறும் பதினான்கு அல்லது இருபது வருடங்களை ஆயுள் தண்டனையாக வரையறுக்கிறது.
இப்போது வர உள்ள புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டம்படி ஆயுள் தண்டனை என்றால் "வாழ்நாள் முழுவதும் சிறை" என்ற சொற்றொடர், மரணம் வரை சிறையில் அடைப்பதைக் குறிக்கிறது. அதே சமயம் பல்வேறு பிரிவுகள் வெறும் பதினான்கு அல்லது இருபது வருடங்களை ஆயுள் தண்டனையாக வரையறுப்பதை நீக்குகிறது. அதாவது இனி ஆயுள் தண்டனை என்றால் கண்டிப்பாக வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும். ஆளும் ஆட்சியாளர்களால் தண்டனைக் குறைப்பு, நிவாரணம் அல்லது தண்டனை இடைநீக்கம், விடுதலை செய்வது தொடரும்.
தூக்கு தண்டனை தொடரும் என்று இந்த சட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் அமெரிக்காவில் இருப்பது போல தண்டனைகளுக்கு அபராதத்தோடு சேவை செய்வதையும் தண்டனையாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறிய தண்டனைகளுக்கு இதுவரை அபராதம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இனி அபராதம் வழங்கப்படும் அல்லது மக்களுக்கு குறிப்பிட்ட துறையில் சம்பளம் இன்றி சேவை செய்யும் வகையில் தண்டனை கொடுக்கப்படும்.
உதாரணமாக ஒருவர் சிறிய குற்றம் ஒன்றை செய்துவிட்டார் என்றால் அவருக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது கேன்சர் நோயாளிகளுக்கு 2 மாத மருந்து செலவை ஏற்க சொல்லி தண்டனை கொண்டு வரலாம். இந்த புதிய முறை இதில் சேர்க்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications