ஏ.. ஏய்.. அதென்ன விரலில் சிகப்பா இருக்கே.. இப்படி கூட நடக்குமா.. வேற லெவல் சிந்தனை.. வௌங்கிடும்..!!
மதுபாட்டில்களுக்கு விபூதி குங்குமம் வைத்து பூஜை செய்துள்ளார் ஒருவர்
சென்னை: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. ஆயுத பூஜை அன்று சிறப்பு விசேஷ சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.. அந்த வீடியோதான் இது.
கடந்த 2020-ல் விநோத சம்பவம் ஒன்று நடந்தது.. ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சிறப்பு வழிபாடு அப்போது நடைபெற்றது.
தொழிற்சாலைகளில் தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபட்டனர்... ஆனால், பெரியகுளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள ஊழியர்கள் இதை வித்தியாசமாக கொண்டாடினார்கள்..

வாழை மரம்
அந்த டாஸ்மாக் கடைக்கு முன்பு வாழை மரம் கட்டி மாலை அணிவித்தனர்.. வரிசையாக மதுபாட்டில்களை அடுக்கி வைத்து, அந்த மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்தனர்.. பிறகு, கற்பூரங்களை கொளுத்தி, அந்த மதுபாட்டில்களுக்கு தீபாராதனை காட்டியதுடன், மொத்த ஊழியர்களும் கீழே விழுந்து பயபக்தியுடன் கும்பிட்டனர்.. இதனை போட்டோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர்... கடைக்கு வந்த குடிமகன்கள் இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டனர்..

சந்தனம் + பொட்டு
'எல்லாரும், அவரவர் வேலை செய்யும் இடத்தில் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். அதன்படியே நாங்களும் கொண்டாடுகிறோம் என்று அந்த டாஸ்மாக் ஊழியர்கள் காரணம் சொன்னார்கள்.. பெரியகுளத்தில் உள்ள டாஸ்மாக்குக்கே வாழைமரம் கட்டி வழிபட்டுள்ளனர் என்றால், முக்கிய இடமான புதுச்சேரியை விட்டுவிடுவார்களா நம்ம குடிமகன்கள்.. நேற்று முன்தினம் புதுச்சேரியில் ஒரு விசித்திர நம்பவம் நடந்துள்ளது.

குங்குமம் + விபூதி
இங்குள்ள மதுபானக்கடையில்தான் இந்த முறை விசேஷ பூஜை நடந்துள்ளது.. மதுபாட்டில்களை துடைத்து சுத்தம் செய்த அந்த கடை ஊழியர், மதுபாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்து, விபூதி, சந்தனம் வைத்தார்.. இதற்காக ஒரு தட்டில் சந்தனம், இன்னொரு தட்டில் குங்குமம் கலந்து வைத்து கொண்டு, ஒவ்வொரு பாட்டிலுக்கும் சந்தனத்தை எடுத்து, 3 விரல்களாலும் பூசி விடுகிறார்.. பிறகு குங்குமம் எடுத்து அந்த சந்தனத்துக்கு நடுவில் பொட்டு வைத்து விடுகிறார்.

ரொம்ப தூரம்
இறுதியில் எல்லா மதுபானங்களுக்கும் சேர்த்து பூஜை நடந்தது.. இதுவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டு எத்தனையோ பேர் இந்த தமிழகத்தில் போராடி உயிர்நீத்துள்ளனர்.. சிலர் டாஸ்மாக்கை இழுத்து மூடுங்கள் என்று அரசுக்கே நேரடியாக கோரிக்கை விடுத்து, தற்கொலையும் செய்துள்ளனர்.. ஆனால், இப்படி வழிபாடுகளை நடத்தி கொண்டிருப்பதை பார்த்தால், மதுவிலக்குக்கும் நம்ம தமிழ்நாட்டுக்கும் ரொம்ப தூரம் போல..!!!
-
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை எவை..? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications