இன்டர்நேஷனல் பிரஷர்.. மோடியை தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்.. சீக்ரெட்டை உடைத்த எக்ஸ்பர்ட்
சென்னை: பிரதமர் மோடியின் பிரச்சாரங்கள், சிறுபான்மையினரை இதனால் எங்கே பாஜக தாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் பெரிய பிரஷராக மாறி உள்ளது. இன்டர்நேஷனல் பிரஷர் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவை தீவிரமாக உற்றுநோக்கி வருகின்றனர். மோடியை தீவிரமாக அவர்கள் கவனித்து வருகின்றனர், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் இது பற்றி பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
இதை வெறுப்பு பேச்சு என்று 17 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். மெயில் மூலம் அவர்கள் இந்த புகார்களை பதிவு செய்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளன.
மோடி பேச்சு விமர்சனம்: மோடியின் இந்த பேச்சு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். .
அதில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. பிரதமரின் பேச்சு கடந்த 4 நாட்களாக ஆபத்தாக சென்று கொண்டு இருக்கிறது. மன்மோகன் சிங் அந்த காலத்தில் பேசாத பேச்சை எல்லாம் பேசியதாக மோடி பேசுகிறார். சொல்லாத விஷயங்களை மோடி திரித்து பேசுகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத விஷயங்களை மோடி திரித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
விஷமத்தனமாக மோடி பேச்சு உள்ளது. இந்துக்களின் சொத்துக்களை எடுத்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு மட்டும் கூடுதல் இட ஒதுக்கீடு கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி உள்ளார். வெளிப்படையாக மோடி விஷமத்தனமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.
உலக நாடுகள் எல்லாம் அதிர்ந்து போய் உள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த 18 எம்பிக்கள் மோடியை எதிர்த்து உள்ளனர். மோடியின் பேச்சை கண்டித்துள்ளனர். அவரின் பேச்சு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐநா இதில் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இது முதல்முறை நடக்கிறது. நம் நாட்டு பிரதமருக்கு எதிராக இப்படி வெளிநாட்டு எம்பிக்கள் பேசுவது முதல்முறை.
உலக நாடுகளை சேர்ந்த அனைத்து முக்கிய ஊடகங்களும் மோடியின் பேச்சை கடுமையாக கண்டித்து உள்ளனர். சிறுபான்மையினரை இதனால் எங்கே பாஜக தாக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் பெரிய பிரஷராக மாறி உள்ளது. இன்டர்நேஷனல் பிரஷர் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவை தீவிரமாக உற்றுநோக்கி வருகின்றனர். மோடியை தீவிரமாக அவர்கள் கவனித்து வருகின்றனர்.
தன்னுடைய ஆட்சியின் வெற்றியை, நலத்திட்டங்களை அவரால் பேச முடியவில்லை. அதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத ரீதியாக எங்கே இந்தியாவில் பெரிய பிளவு ஏற்படுமோ என்ற பெரிய அச்சம் ஏற்பட்டு உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications