ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்
சென்னை: தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் தொழில் முதலீடுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அதிரடியான விளக்கங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். விருதுநகர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரயில்வே துறையின் செயல்பாடுகள் முதல் மாநிலத்தின் அண்மைக்கால அரசியல் சர்ச்சைகள் வரை பல விஷயங்களை விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
விருதுநகர் ரயில்வே நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் மந்தமாக நடப்பது குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், இந்தத் தாமதத்திற்குத் திட்டமிடுதலில் உள்ள சில தொழில்நுட்பக் குளறுபடிகளும், விரிவாக்கப் பணிகளுமே முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

அம்ரித் பாரத் திட்டம்
எனினும், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு உள்ளதாகவும், அனைத்துப் பணிகளும் 2027 ஜனவரிக்குள் நிறைவடையும், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அதிநவீன வந்தே பாரத் ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் வழங்கினால், பயணிகளின் முன்பதிவு கணிசமாக அதிகரிக்கும். இது ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாயை ஈட்டித் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசின் போக்கை அவர் கடுமையாக விமர்சிக்கும்போது, ரயில் நிலையங்களின் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வெண்டிங் மெஷின்கள் மற்றும் "ரயில் ஒன்" செயலி மூலமாகப் பெற வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள், ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கையே" என்று சாடினார்.
ராயல் என்பீல்டு - முதலீடு - கீர்த்தனாவின் தென்கொரியா பயணம்
இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமை ஏற்றுள்ளதால், தங்களுக்கு மதிப்பளிக்கும் கட்சிகளுக்குத் தாங்களும் உரிய மதிப்பைத் தருவோம் என்று கூட்டணி கொள்கையை தெளிவுபடுத்திய மாணிக்கம் தாகூர், தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் தென்கொரியா பயணம் மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதலீடு ஆந்திர மாநிலத்திற்குச் சென்ற விவகாரம் குறித்துப் பேசினார்.
சிலர் இந்த விவகாரத்தில் தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், தமிழகத்தில் த.வெ.க அரசு அமைந்து 30 நாட்கள் ஆவதால், துறை மேம்பாட்டிற்காக அமைச்சர் கீர்த்தனா பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறார், அதன் ஒரு பகுதியாகவே அவரது தென்கொரியப் பயணம் அமைந்துள்ளது' என்றார்.
அரை மீசை பாரதி
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் சமீபத்திய கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், வரும் 2027 ஜனவரி 1 முதல் அவர் "அரை மீசை பாரதி" என்றுதான் அழைக்கப்படுவார் என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். இத்தகைய அகங்காரமும் ஆணவமுமே கடந்த தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்கக் காரணமாக அமைந்தது என்றும், அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தற்போதைய திமுகவினருக்கு இல்லை என்றும் சாடினார்.
மேலும், தென் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையான பரந்தூர் விமான நிலையப் பிரச்சினையில் த.வெ.க அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்றும், மின்வாரிய ஊழல் மற்றும் அலுவலகத்தில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications