Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருட்டுக்கடை வரை.. அதிகரிக்கும் வரதட்சணை புகார்.. உச்ச நீதிமன்றம் சொன்ன முக்கியமான விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள இருட்டுக்கடை அல்வா உலகப் புகழ் பெற்றது. இதன் உரிமையாளர் கவிதா சிங். இவருடைய மகள் கனிஷ்கா தனது கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். பொதுவாக வரதட்சணை புகார்கள் தற்போது அதிகரித்து வருகிறது. சாமானியர்கள் தொடங்கி இருட்டுக்கடை உரிமையாளர் வரை பல்வேறு தரப்பிலும் இந்த பிரச்சனை அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வரதட்சணை புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சொன்ன முக்கியமான விஷயம் பற்றி பார்ப்போம்.

திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள இருட்டுக்கடை அல்வா உலகப் புகழ் பெற்றது. இதன் உரிமையாளர் கவிதா சிங். இவருடைய மகள் கனிஷ்கா. இவருக்கும், கோவையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருநெல்வேலியில் திருமணம் இனிதே நடந்தது.

iruttukadai shop owner dowry complaint The important thing said by the Supreme Court

காவல் நிலையத்தில் புகார்

இந்த நிலையில் தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாகவும், கணவர், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும், இருட்டுக்கடை உரிமையை வரதட்சணையாக கேட்பதாகவும், நேற்று திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கனிஷ்கா தனது தந்தை ஹரிசிங், தாயுடன் வந்து புகார் மனு அளித்தார்.

வேறு பெண்ணுடன் தொடர்பு

இதைத்தொடர்ந்து கனிஷ்கா செய்தியாளர்களிடம் கூறும் போது, எனக்கு கடந்த பிப்ரவரி 2-ந் தேதி திருமணம் நடந்தது. எனது கணவருடன் கோவையில் வசித்து வந்தேன். எனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இது சம்பந்தமாக நான் எனது பெற்றோரிடம் கூறினால் என்னை கொன்று விடுவதாக தொடர்ந்து மிரட்டினார். இதனால் நான் மனவேதனை அடைந்து கடந்த மாதம் 15-ந் தேதி எனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

இருட்டுக்கடை வரதட்சணை

மறுநாள் இரவு எனது கணவரும், அவரது குடும்பத்தார்களும் திருநெல்வேலிக்கு வந்து எனது தாயிடம், உன் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சணை வேண்டும். திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் இருட்டுக்கடை உரிமையை எனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என்று மிரட்டினார்கள் என்றார்.

பல்ராம் சிங்

இதை திட்டவட்டமாக மறுத்த கோவையில் உள்ள பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இருட்டுக்கடை அல்வா குழுமம் ஒரு ஆண்டுக்கு முன்புதான் கவிதாசிங்கின் பெயருக்கு மாறி இருந்தது. பெரிய குடும்பங்களில் இருந்து எல்லாம் எனது மகனுக்கு வரன் வந்த நிலையில்,சாதாரண குடும்பத்தை சேர்ந்த கனிஷ்காவை நான் எனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்னர் தான் அவர்களுக்கு பல கோடி ரூபாய் கடன் இருப்பது எங்களுக்கு தெரியவந்தது.

அதிக கடன்

அவர்கள் வைத்திருந்த காருக்கு கடன் தவணை செலுத்த முடியாமல் அதை விற்று விட்டார்கள். திருமண செலவு உள்பட அனைத்தையும் கடன் வாங்கி தான் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் நாங்கள் ஏன் வரதட்சணை கேட்க போகிறோம். அவர்கள் நடத்தி வரும் கடையே வாடகை இடத்தில்தான் இருக்கிறது. அதை நாங்கள் கேட்டோம் என்று சொல்வது ஆதாரமற்றது. ரூ.1.5 கோடி காரை நாங்கள் வரதட்சணையாக கேட்கவில்லை.

வாட்ஸ் அப்பில் புகார்

எனது மகனுக்கும், மருமகளுக்கும் இடையே பிரச்சினை இருந்தது உண்மைதான். இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று நினைத்து நான் இன்று (அதாவது நேற்று) கூட வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு அவர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்கள். எனவே அவர் அளித்து உள்ள புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றம் விளக்கம்

வரதட்சணை குற்றச்சாட்டு என்பது இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் உண்மைத் தன்மையுடன் புகார் அளித்தாலும், சிலர் கணவனையும், கணவர் குடும்பத்தையும் பழிவாங்கும் வகையில் வழக்கு தொடர்வது நடக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் வழக்கு ஒன்றில் விளக்கம் அளித்துள்ளது.

ஆணுக்கும் பிரச்சனை

உச்ச நீதிமன்றத்தில் 'ஜன்ஸ்ருதி' என்ற தொண்டு நிறுவனம் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. அதில், வரதட்சணை கொடுமை, ஜீவனாம்சம் தொடர்பான சட்டப்பிரிவுகள், கணவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. எனவே, அந்த சட்டப்பிரிவுகளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதாக மாற்றக்கோரி இருந்தது.

நாடாளுமன்றம் செய்ய வேண்டும்

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், சட்டத்தில் எந்த பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லுங்கள். தவறாக பயன்படுத்தப்படுவதற்காக எந்த சட்டத்தையும் ரத்து செய்ய முடியாது. பெண்கள் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக் கூடாது. எங்காவது கணவன்மார்கள் பாதிக்கப்பட்டால், சட்டம் தனது கடமையை செய்யும். அதற்காக சட்டத்தில் திருத்தம் செய்ய கோர்ட்டால் முடியாது. அதை நாடாளுமன்றம் தான் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+