யோகி காலில் விழுந்ததை விடுங்க.. சுரங்கத்தில் முதலீடு செய்யுறாராம் ரஜினி! ஓ இதுக்குதான் அங்கே போனாரா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததற்கு பின் வேறு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவர் காலில் விழுந்ததுதான் பேசுபொருளாகி இருக்கிறது. 2020ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அப்போதே அதற்கு பின் பாஜக இருப்பதாக கூறப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக கால் பதிக்க முடியாத காரணத்தால் ரஜினிகாந்த் மூலம் பாஜக களமிறங்குகிறது. பாஜக - ரஜினிகாந்த் கூட்டணி வைப்பார்கள் என்றும் செய்திகள் வந்தன.

அதன்பின் ரஜினிகாந்த் பல முறை பாஜகவிற்கு ஆதரவாக பேசினார். அதேபோல் பாஜகவின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாகவும் பேட்டி அளித்தார். இதில் முக்கியமானது.. ரஜினி திராவிட அரசியல் உள்ள தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் அளிப்பேன் என்றார். அவருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறப்பட்டது.
அரசியலில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்டாலும் கூட தற்போதும் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த சனிக்கிழமை ரஜினிகாந்த் முதல்வர் ஆதித்யநாத் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அவர் வீட்டு வாசலுக்கு வந்த போதே ரஜினிகாந்த் அவரின் காலில் விழுந்து மரியாதையை செய்தார்.
ஏன் விழுந்தார்: நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்தது ஏன் என்று விவாதம் எழுந்துள்ளது. ஆதித்யநாத் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் இந்து மத துறவி, அவர் கோவில் பதவிகளிலும் இருக்கிறார், அவர் தலைமை பூஜாரியாகவும் இருக்கிறார். அதனால் அவரின் காலில் விழுந்தார் என்று ஒரு சாரார் கருத்து சொல்கின்றனர்.
ஆனால் மோடி காலில் விழாமல், ஆதித்யநாத் காலில் ரஜினி விழ வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதன்படி ஆதித்யநாத் எதிர்கால பிரதமராகும் வாய்ப்புகள் உள்ளதாக பாஜக கருதுகிறது. மோடிக்கு பின் யோகிதான், ஏன் 2024 தேர்தலில் கூட ஆதித்யநாத் பிரதமராக முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
அதை எல்லாம் மனதில் வைத்துதான் ரஜினிகாந்த் ஆதித்யநாத் காலில் விழுந்தார். இதனால்தான் மோடி காலில் கூட விழாத ரஜினி தன்னைவிட 20 வயது குறைந்தவரின் காலில் விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
வேறு பின்னணி: உ.பி.முதல்வர் யோகியை சந்தித்து அவரது காலில் ரஜினி விழுந்ததைத் தான் மீடியாக்களும் சோசியல் மீடியாக்களும் அதிகம் பேசின. ஆனால், ஜார்கண்டு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் ரஜினி சந்தித்தார்.அந்த சந்திப்பு குறித்தும் அதன் பின்னணி குறித்தும் கவனம் செலுத்தவில்லை.
ஆனால், இவர்களின் சந்திப்பு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ரஜினி காந்தின் நண்பர். அவர் மூலமாக சுரங்கத் தொழிலில் சில முதலீடுகளை செய்திருக்கிறாராம் ரஜினி. அந்த நண்பர், ஜார்கண்டில் சுரங்க பிஸ்னெஸ் செய்யும் யோசனை சொல்லியிருக்கிறார்.
இங்கே சினிமா மூலம் சம்பாதித்ததை வடஇந்திய மாநிலங்களில் முதலீடாக செய்ய ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளாராம். முறைப்படியும் சட்டப்படியும் தொழில் செய்யும் வழிமுறைகள் குறித்து சி.பி.ஆரிடம் விவாதிக்கவே சென்றாராம் ரஜினி. அந்த பிஸ்னெஸ் குறித்து ரஜினி விவாதித்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications