அதிமுக கூட்டணி உடைய காரணமே அமித் ஷாதானாம்.. அண்ணாமலை இல்லையாமே.. வெளியான சீக்ரெட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமித் ஷா வைத்த கோரிக்கைதான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவிற்கு காரணம், அண்ணாமலையின் பேச்சு காரணம் இல்லை, என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக மோதல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக கூட்டணி முறிவிற்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த கூட்டணி தொடர்பாக அரசியல் விமர்சகர் ரிஷி ஒன்இந்தியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 Is Amit Shah a real reason behind the AIADMK - BJP alliance break? says Political Strategist Rishi

அதில், 99 சதவிகிதம் எடப்பாடி கூட்டணியை முறித்துவிட்டார். மாநில தலைமையுடன்தான தற்போது பிரச்சனை. மத்திய தலைமையுடன் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த 1 சதவிகிதம்தான் இருக்கும். அதுவும் கூட ஜனவரி.. பிப்ரவரி மாதங்களில்தான் தெரியும். அப்போது நிலவும் அரசியல் சூழலை வைத்தே முடிவு எடுக்கப்படும். எடப்பாடி சில டிமாண்ட் வைத்துள்ளார். அதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி அமித் ஷாவை மீட் செய்த பின்புதான் கூட்டணி முறிந்தது. அதுதான் கூட்டணி உடைய காரணம்.

இன்னொரு பக்கம் தொண்டர்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இல்லை. தொண்டர்கள் இடையே கடும் கருத்து மோதல் உள்ளது. அப்படி இருக்க மேலே உள்ளவர்கள் கூட்டணி வைத்தாலும் கூட பலன் கிடைக்காது. இன்னொரு பக்கம் அண்ணாமலையை மாற்றினாலும் பலன் இல்லை. எடப்பாடிக்காக அண்ணாமலையை மாற்றினால் என்ன செய்ய முடியும். அண்ணாமலையை மாற்றுவதன் மூலம் என்ன கிடைக்கும்? அண்ணாமலை இல்லாமல் பாஜக ஜெயிக்குமா? பாஜகவிற்கு என்ன பயன்?

 Is Amit Shah a real reason behind the AIADMK - BJP alliance break? says Political Strategist Rishi

முடங்கி இருந்த பாஜக அண்ணாமலை வந்த பின்புதான் வேலை செய்ய தொடங்கி உள்ளது. இப்போது எடப்பாடி சொல்வதை கேட்டு அண்ணாமலையை மாற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தேர்தல் நேரத்தில் எடப்பாடி தொகுதி கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள்? அப்போது 4 தொகுதிகளை மட்டும் எடப்பாடி கொடுத்தால் என்ன செய்வார்கள்? இவர்கள் எங்கே செல்வார்கள் ? பாஜக அப்போது அண்ணாமலை இல்லாமல் என்ன செய்யும்? அதனால் அண்ணாமலையை மாற்ற மாட்டார்கள்.

அமித் ஷா வைத்த கோரிக்கைதான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம். அதிமுக - பாஜக கூட்டணி பெரிய பலம் உள்ள கூட்டணி இல்லை. அதனால் இந்த கூட்டணி உடைந்தாலும் கூட அண்ணாமலையை காரணம் காட்ட மாட்டார்கள். இதற்காக எல்லாம் அண்ணாமலையை தூக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் அமித் ஷா சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார். அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. அதுதான் கூட்டணி உடையவே காரணம். ஆனால் இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

2021ல் அதிமுக தனது வாக்குகளை கொஞ்சம் வாங்கியது. ஆனால் அதன்பின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று எல்லாத்திலும் அதிமுக பெரிதாக சரிந்தது. இதனால் அதிமுக வாக்கு வங்கி சரிந்ததாகவே கருத வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஈரோடு கிழக்கில் தனியாக நின்ற அதிமுக படுதோல்வி அடைந்தது. அங்கே அதிமுக வாக்கு வங்கி சரிந்தது. அதனால் அதிமுகவின் வாக்கு வங்கி எப்படி இருக்கும் என்பதே இப்போது கேள்வி. லோக்சபா தேர்தல் முடிந்த பின்பே இது தெரிய வரும், என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+