டெல்லி அரசியலுக்கு போகும் அண்ணாமலை.. மோடி தரும் "வெகுமதி".. ஓ இவ்வளவு இருக்கா? கசியும் சீக்ரெட்
சென்னை: டெல்லி தலைமை அண்ணாமலையை டெல்லி கொண்டு செல்ல முயற்சி செய்யலாம். டெல்லி கொண்டு சென்றுவிட்டு அமைச்சர் ஆக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்..
பாஜக சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, எல் முருகன் இரண்டு பேர் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளனர்.

அதன்படி நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
அண்ணாமலை கோவை: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பாஜகவின் அண்ணாமலை.
இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையை லோக்சபா தேர்தலில் களமிறக்க பாஜக முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றனர். டெல்லி பாஜக இவரை தேர்தலில் களமிறங்கும்படி அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி அளித்துள்ளார்.
ஒன்இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்லி தலைமை அண்ணாமலையை டெல்லி கொண்டு செல்ல முயற்சி செய்யலாம். டெல்லி கொண்டு சென்றுவிட்டு அமைச்சர் ஆக்கலாம். அல்லது அங்கே எம்பி + எதாவது பதவி கொடுத்துவிட்டு அப்படியே தமிழ்நாட்டில் தலைவரை மாற்றலாம். எல் முருகனை மாற்றியது போல. அண்ணாமலையால் கட்சி வளர்ந்து இருக்கிறது என்று வெளியே கூறினாலும், உண்மையில் கட்சி எவ்வளவு வளர்ந்தது என்று இவர்களுக்கு தெரியும்.
கட்சி உள்ளே இருப்பவர்களுக்கு தெரியும். அண்ணாமலை செய்த வேலைகளை பாராட்டும் விதமாக அவரை டெல்லிக்கு கொண்டு செல்லலாம். அண்ணாமலையை தேர்தலில் களமிறக்க டெல்லி பாஜக நினைக்கிறது. அவர் தோற்றால் கூட பரவாயில்லை. களமிறங்கட்டும் என்று டெல்லி தரப்பு நினைக்கிறது. அவர் வெற்றிபெற்றால் அமைச்சர் பதவி கொடுக்கலாம்.
கட்சி வளர்ந்துவிட்டது என்று கூறுகிறார். அதனால் அவர் களமிறங்கட்டும். அதுவே சரியாக இருக்கும் என்று டெல்லி தலைமை நினைக்கிறது. அவரை கரூரில் களமிறக்க பாஜக திட்டமிடலாம். செந்தில் பாலாஜி இல்லை. அவரை உள்ளே வைத்துள்ளனர். அப்படி இருக்க ஜோதிமணி அண்ணாமலைக்கு பெரிய டப் கொடுக்க முடியாது.
அண்ணாமலை கரூரில் களமிறங்கினால் அண்ணாமலை ஜோதிமணி இடையே போட்டி நிலவும். அதன் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அண்ணாமலை ஜெயிக்க கூட வாய்ப்புகள் உள்ளது. அண்ணாமலை நன்றாக செயல்படுகிறார் என்று மோடி நினைக்கலாம். அதனால் அவரை பாராட்டும் விதமாக டெல்லிக்கு அண்ணாமலை அழைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
டெல்லி தலைமை அண்ணாமலையை டெல்லி கொண்டு செல்ல முயற்சி செய்யலாம். டெல்லி கொண்டு சென்றுவிட்டு அமைச்சர் ஆக்கலாம். இங்கே சீனியர்களுடன் அவருக்கு பிரச்சனை இருக்கிறது. இதற்காகவும் கூட அவரை டெல்லிக்கு அழைத்து வந்துட்டு வேறு தலைவரை பாஜக நியமிக்கலாம். அண்ணாமலை நம்பிக்கையாக இருக்கிறாரா? அவர் களமிறங்குவாரா என்று பாஜக சோதனை செய்யலாம்.












Click it and Unblock the Notifications