இவங்க + அவங்க.. மெகா முடிவை எடுத்த அண்ணாமலை.. சும்மா கேட்காதீங்க! அப்படியே ஒதுக்கி தள்ளிய எடப்பாடி?
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையிலான மோதல் அதிகரித்துவிட்டது. இரண்டு தரப்பிற்கும் இடையில் தற்போது நடக்கும் மோதலுக்கு பின் வேறு காரணங்கள் உள்ளதாம்.
சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை அண்ணாமலை பேசினார்.

முக்கியமாக அதிமுகவின் ஊழல்கள் என்று அவர் மறைமுகமாக குற்றச்சாட்டு வைத்தார்.
அவர் தனது பேட்டியில், ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும். திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை.
இது பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம், என்று கூறினார்.
கூட்டணி:
அவரின் இந்த பேட்டி சர்ச்சையான நிலையில்தான் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது அதிமுக கூட்டணி இல்லாமல் போட்டியிட அவர் திட்டமிட்டு வருகிறாராம்.
இதை மனதில் வைத்தே, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன்.
தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். , என்று குறிப்பிட்டு இருக்கிறாராம்.
அமித் ஷா:
ஆனால் அமித் ஷாவோ தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருகிறது. அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என்றும் கூறி இருந்தார்.
இதையும் மறுத்த அண்ணாமலை, இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கூற இயலாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார்.

ஏன் உறுதி ?:
மொத்தத்தில் அதிமுக பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவிற்கு அண்ணாமலை வந்துவிட்டாராம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அவர் கொடுக்கும் இடத்தில் மட்டுமே போட்டியிட முடியும். அவர்கள் கோவையை நமக்கு கொடுக்க மாட்டார்கள்.
அதனால் வேண்டாம். அதோடு எடப்பாடியுடன் நமக்கு சுமுகமான உறவு இல்லை. அப்படி இருக்க நமக்கோ, நாம் கேட்கும் உறுப்பினர்களுக்கோ சீட் கிடைக்காது. அதனால் அதிமுகவுடன் உறவு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை இருக்கிறாராம்.
இதை டெல்லியிடம் சொல்லி அவர்களை சமாதானம் செய்யும் திட்டத்திலும் அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது.
தேமுதிக, பாமக, அமமுகவுடன் கூட்டணி வைப்போம். இவர்களை சேர்த்து புதிய கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று அண்ணாமலை தரப்பு நம்புகிறதாம். இதையே டெல்லியில் சொல்லி அதிமுகவை கழற்றிவிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒதுக்கிய எடப்பாடி
இதன் காரணமாகவே நேற்று செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கோபமாக பேசினார். செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அண்ணாமலை பெயரை கேட்டதும் கோபம் அடைந்த எடப்பாடி தனது பேட்டியில், அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.
முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.
அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று எடப்பாடி கூறினார்.












Click it and Unblock the Notifications