அண்ணாமலைக்கு முழு சப்போர்ட்.. அமித் ஷா தந்த கிரீன் சிக்னல்.. அப்போ எல்லாம் சுபம்? இப்படி சொல்லுறாரே!
சென்னை: டெல்லியில் இருக்கும் பாஜக தேசிய தலைவர்கள் அண்ணாமலைக்கு பூரண ஆதரவு கொடுக்கிறார்கள், அதனால்தான் எடப்பாடி பேச வந்த போது, அண்ணாமலையை பேச அழைக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் சில நாட்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் சந்திப்பு நடந்தது. டெல்லியில் நடந்த இந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை இந்த மோதல் ஏற்படுத்தி உள்ளது. அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இவர்களின் சந்திப்பு குறித்து பத்திரிகையாளர் பா.கி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், பாஜக - அதிமுக இடையிலான கசப்பு கொஞ்ச நாட்களுக்கு இருக்கும். அதன்பின் சரியாகிவிடும். ஏனென்றால் இவர்களை சேர்த்து வைத்தது மேலிடத்தில். தேசிய தலைவர்கள் முன்னிலையில் அமித் ஷா - மோடி ஆகியோர் சேர்த்து வைத்துள்ளனர். அதனால் பிரச்சனை சரியாகிவிட்டது.
தேசிய தலைவர்கள் முன் இவர்கள் ஒன்று சேர்ந்துவிட்ட நிலையில்.. பாஜக கூடுதல் இடங்களை எதிர்காலத்தில் கேட்குமோ என்ற அச்சம் அதிமுகவிற்கு உள்ளது. ஆனால் இப்போது அது பெரிய பிரச்சனை இல்லை. இப்போதைக்கு இவர்கள் இடையிலான மோதல் சரி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு முன் நிர்மல் குமார் அண்ணாமலையை விமர்சனம் செய்தார். நிர்மல் குமார் அதிமுகவில் சேரும் போது அண்ணாமலையை விமர்சனம் செய்தார். இதை எடப்பாடி கண்டிக்கவில்லை. அண்ணாமலை இதனால் கடுப்பானார்.
தனிப்பட்ட முறையில் அண்ணாமலை மனமுடைந்து போனார். ஆனால் இது சரியாகிவிட்டது. கூட்டணிக்கு இடையில் முரண்பாடு இருக்கலாம். அதை தவறாக சொல்ல முடியாது. கூடா நட்பு என்று காங்கிரசை திமுக சொன்னது. பின்பு அவர்களுடனே திமுக கூட்டணி வைக்கவில்லையா?
உள்ளாட்சி தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதே.. அதனால் கூட்டணி மோதல்களை எல்லாம் பெரிதாக்க கூடாது. பாஜக கூட உடன் திமுக கூட்டணியில் இருந்ததே. கூட்டணி உரசல்கள் இருக்கலாம். தேசிய தலைவர்கள் கருத்து சொன்னபின் இவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அவ்வளவுதான்.
கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள் பேசியதை விட அண்ணாமலை கொஞ்சம் அதிகம் பேசிவிட்டார். ஆனால் அதிமுகவால் பாஜகவை சார்ந்து இருக்க வேண்டும். பாஜகவிற்கு அதிமுகவை சார்ந்து இருக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் பிரிந்து சென்றுவிட்டன.
அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் உள்ள அதிமுக கூட்டணியை பாஜக எப்படி முறிக்கும்? பாஜக வளர்ந்து வருகிறது. இதற்காக அண்ணாமலை பணிகளை செய்து வருகிறார். அதற்கான பணிகளை செய்து வருகிறார். அப்படி இருக்க அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற பாஜக கண்டிப்பாக முயலும்.
இவர்கள் இடையே சின்ன சின்ன மோதல்கள் இருக்கலாம். ஆனால் கூட்டணிக்கு எந்த சிக்கலும் வராது. அதற்கான சான்ஸ் இருக்காது. டெல்லியில் இருக்கும் பாஜக தேசிய தலைவர்கள் அண்ணாமலைக்கு பூரண ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால்தான் எடப்பாடி பேச வந்த போது, அண்ணாமலையை பேச அழைக்கிறார்கள்.

அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட கிரீன் சிக்னல் அது. அதிமுக - பாஜக இப்போது சேர்ந்துவிட்டது. அதனால் கூட்டணியில் பிரச்சனை இருக்காது, என்று பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications