கவனிச்சீங்களா! யோசித்து பார்க்காத ட்விஸ்ட்! அதிமுக வாக்கு வங்கி அப்படியே திமுகவிற்கு ஷிப்ட் ஆகுது?
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் முக்கியமான வாக்கு வங்கியில் திமுக கை வைத்துள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் திமுக பிரம்மாண்ட முன்னிலை பெற்றுள்ளது. 11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது

இதன் அர்த்தம் அதிமுக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்களும் அதிமுக இல்லை என்றாலும் கவலைபடாமல் வந்து வாக்களித்து உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது பதிவான வாக்குகள்-182426.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணிப்போம் அறிவிப்பு செய்தபோது பதிவான வாக்குகள்-195495. இதன் அர்த்தம் அதிமுக இல்லையென்றாலும் அதை மக்கள் பொருட்டாக கருதவில்லை. இங்கே சராசரியாக 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். இந்த முறை அதை தாண்டி கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பதிவாகி உள்ளது.
அதிமுக நோ: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
"அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி உள்ளது அதிமுக.
வன்னியர்: இந்த நிலையில் அதிமுவிற்கு உள்ள வன்னியர் வாக்குகளை குறி வைக்க பாமக களமிறங்கியது. இங்கே அன்புமணி அதிமுகவினர் ஆதரவை கேட்டார். எம்ஜிஆர் ஜெயலலிதா போட்டோவை வைத்து அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
அதிமுக வாக்குகள் அப்படியே தங்களுக்கு வரும் என்று அன்புமணி நினைத்தார். அதிமுகவின் 30+ சதவிகித வாக்குகளை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதில் அன்புமணி தீவிரமாக களப்பணிகளை செய்து வந்தார். அதிமுகவின் வன்னியர் வாக்குகள்தான் அன்புமணியின் குறியாக இருந்தது. இன்னொரு பக்கம் சீமான் நேரடியாக அதிமுக ஆதரவை கேட்டார். அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
திமுக பிளான்: ஆனால் இப்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளில்.. அதிமுகவின் முக்கியமான வாக்கு வங்கியில் திமுக கை வைத்துள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் திமுக பிரம்மாண்ட முன்னிலை பெற்றுள்ளது.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கிளியராக முன்னிலை வகித்து வருகிறது. 11,928 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 5,404 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 605 வாக்குகள் பெற்றுள்ளார். தபால் வாக்குகளிலும் திமுக கடைசியில் அதிக வாக்குகளை வென்றது. அதன்படி திமுக அதிமுகவின் தலித் வாக்கு வங்கி, பெண்கள் வாக்கு வங்கியை குறி வைத்து திமுக தங்கள் பக்கம் எடுத்துள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.
அதிமுகவின் தலித் வாக்குகள் பாமக காரணமாக திமுகவிற்கு வந்துள்ளது என்று எண்ண தோன்றுகிறது. அதோடு கூடுதலாக மகளிர் உரிமை தொகை காரணமாக பெண்கள் வாக்குகள் கணிசமாக திமுகவிற்கு வந்துள்ளது என்று என்னை தோன்றுகிறது.
ஜெயலலிதா இருந்த போது பெண்கள் வாக்குகள் அதிகமாக அதிமுகவிற்கு சென்றது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த வாக்குகள் எல்லாம் திமுக பக்கம் செல்ல தொடங்கி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. அதிமுக இல்லாத நிலையில் ஆளும் கட்சிக்கு போடுவதே சரி என்று மக்கள் திமுக பக்கம் திரும்பி உள்ளனரோ என்று எண்ண தோன்றுகிறது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications