Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமகவை இழுக்க எடப்பாடி ரகசிய கூட்டணி? அப்படி மட்டும் நடந்தா அதிமுகவுக்குத்தான் ஆப்பு.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: . எடப்பாடி சாணக்கியத்தனமாக முடிவு எடுக்கவில்லை. பாமக உடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க எடப்பாடி இப்படி செய்திருந்தார் என்று வைத்து இருந்தால் கூட சாணக்கியத்தனம் இல்லை என்று மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக மாறி உள்ளது.

vikravandi assembly by election 2024 vikravandi pugazhendhi vikravandi by election dmk politics

இந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி திமுகவிற்கு எதிராக போட்டியிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது போக இங்கே நாம் தமிழர் போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என்ற அதிமுகவின் நிலைப்பாடு, அக்கட்சியை மேலும் வலுவிழக்கவே செய்யும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. இது ஜெயலலிதா எடுக்காத அரசியல் முடிவு.

முன்பு ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறார். ஆனால் அவர் புறக்கணித்த போது, மூன்றாவது அணி எதிர்திசையில் இல்லை. அப்போது என்டிஏ கூட்டணி பெரிதாக இல்லை. பாஜக கூட்டணியின் வாக்கு வங்கியும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் வேறு.

திமுகவிற்கு எதிர்கட்சி அதிமுக தான் என நிரூபிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை அதிமுக இழந்திருக்கிறது. இந்த இடத்தை பாஜகவிற்கு அள்ளிக் கொடுத்துள்ளது. பாஜக கூட்டணி 'எதிர்கட்சி' என்ற சான்சை அதிமுகவே உருவாக்கி கொடுத்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் . பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆனாலும் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று எடப்பாடி கூறி உள்ளார்.

எடப்பாடி சறுக்கல்: எடப்பாடியின் இந்த முடிவு பற்றி மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடிக்கு தொடர்ந்து தோல்வி வருகிறது. அதனால் அவருக்கு தோல்வி பயம். அந்த கட்சிக்கு தயக்கம் பயம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ரவிக்குமார் விசிக சார்பாக 39 % வாக்கு வாங்கினார். அதிமுக 35% வாக்கு வாங்கியது. அங்கே பாமக 16 சதவிகிதம் வாக்கு வாங்கியது. அப்படி இருக்க அதிமுக போட்டியிட்டு இருக்கலாம்.

அதிமுகவிற்கு அங்கே வாய்ப்புகள் உள்ளன. பானை சின்னத்தில் ரவிக்குமார் வாக்குகள் பெற்று இருக்கிறார் என்றாலும்.. அதிமுகவிற்கு கொஞ்சம் எட்ஜ் உள்ளது. வன்னியர்கள் வாக்குகள் இன்னமும் அதிமுகவிற்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்போது பாமக - அதிமுக கூட்டணி இருந்தது.

அப்போது 10.5% வாக்குகள் கொடுத்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. சிவி சண்முகம் இருந்தும் கூட எடப்பாடி இப்படி முடிவு எடுத்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

2026கான் அடித்தளம் இது. அதற்கு தயாராகும் வகையில் எடப்பாடி முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி முடிவு எடுக்கவில்லை. எடப்பாடி சாணக்கியத்தனமாக முடிவு எடுக்கவில்லை. பாமக உடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க எடப்பாடி இப்படி செய்திருந்தார் என்று வைத்து இருந்தால் கூட சாணக்கியத்தனம் இல்லை.

அது எடப்பாடியின் சொதப்பல். இது யுக்தியாக இருக்க வாய்ப்பு இல்லை. அது யுக்தியாக இருந்தாலும் அது பெரிய தவறான யுக்தி.. ஏனென்றால் அப்படி நடந்தால் அது அதிமுகவிற்குத்தான் சிக்கலாக மாறும், என்று மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+