ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. சீறும் "தலைகள்".. திமுகவுடன் இணைகிறதா மதிமுக.. வரலாறு திரும்புகிறதா
மதிமுகவை திமுகவுடன் இணைப்பது சாத்தியமா என்று தெரியவில்லை
சென்னை: மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல் வெடித்து கிளம்பி வரும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
வைகோ மகன் துரை வையாபுரி தலைமைக்கழக செயலாளராக நியமிக்கப்பட்டதன் எதிர்ப்பு, நாலாபக்கமும் வெடித்து கிளம்பி உள்ளது..
மதிமுகவிலும் வாரிசு அரசியல் தலை தூக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் சொந்த கட்சியினராலேயே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வைகோ
அன்று திமுகவில் வைகோவுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்ட சமயம் அது.. அப்போது, நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகிய 5 தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்... அவர்களில் ஒருவரான நொச்சிப்பட்டி தண்டபாணி, வைகோவின் சென்னை அண்ணாநகர் வீட்டு வாசலிலேயே மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து இறந்தார்... அந்த சடலத்தை தூக்கிக்கொண்டு கரூர் மாவட்டத்துக்கு ஓடினார் வைகோ.. தீப்பிழம்பாய் கொந்தளித்தார்.

நொச்சிப்பட்டி
"தீக்கிரை ஆகியிருக்கிறான் நொச்சிப்பட்டி தண்டபாணி... தன்னுடைய உயிரை கொடுத்து என்னை உயர்த்தியிருக்கிறான்.. ஆனால், தன் மகனுக்கு பட்டாபிஷேகம் சூட்டுவதற்காக என்னை வெளியேற்றியிருக்கிறார்கள்.. நான் கரூர் மண்ணிலிருந்து நீதி கேட்கிறேன்!' என்று சீறினார் வைகோ.. இறுதியில் கட்சியை விட்டு வெளியேறி மதிமுகவை உருவாக்கினார்.

கருணாநிதி
"வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சிதான் மதிமுக'.. இந்த வரிகளை, தன்னுடைய அத்தனை மேடைகளிலும் முழங்கி கொண்டே இருந்தவர்தான் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ. ''ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பார்க்கிறார் கருணாநிதி" என்று ஓபனாகவே அட்டாக் செய்தவரும்கூட.. அவரது இந்த அவரின் பேச்சைக்கேட்டுதான், தொண்டர்கள் உற்சாகமாகி அணிதிரண்டனர்.. அன்று கருணாநிதிக்கு வந்த அதே நிலைமைதான் இன்று வைகோவுக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..

வாரிசு அரசியல்
ஆனால், தன் நண்பர் விஜயகாந்த் மனம் நோகும்படி யாரும் எதுவும் செய்யக்கூடாது என்று தன் மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.. விஜயகாந்த் நண்பர் என்ற ரீதியில் அப்படி முடிவெடுத்திருந்த நிலையில், வைகோ, சொந்த கட்சி கூட்டணியில் உள்ளார் என்ற ரீதியில் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனிடையே, இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிருப்தியாளர்கள் மீண்டும் அறிவாலயம் நோக்கி நடப்பார்களா? என்ற சந்தேகம் கிளம்பி வருகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!

துரை வைகோ
வாரிசு அரசியலையும் தாண்டி இன்னொரு கோரிக்கை வெடித்துள்ளது, அது மதிமுகவை திமுகவுடன் சேர்க்க வேண்டும் என்பதுதான்.. இதை அதிருப்தி மாவட்ட செயலாளர்களே வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள்.. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. காரணம், நேற்றைய தினம் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, "1700 பொதுக்குழு உறுப்பினர்களில் 10 பேரை தவிர எல்லாருமே தலைமை மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறார்கள்.. அந்த 10 பேரின் நடவடிக்கையால் நிர்வாகிகள் கொந்தளித்து போய் உள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.

பிரச்சனை
மற்றொரு பக்கம் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.. அதிலும் போர்க்கொடி தூக்கி உள்ள மாவட்ட செயலாளர்கள், மதிமுகவின் வேர்கள் என்றும் கருதப்படுகிறது.. மிக முக்கியமானவர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி உள்ளதால்தான் குழப்பமும் அதிகமாகி வருவதாக தெரிகிறது.. அதேசமயம், திமுகவுடன் மதிமுகவை இணைத்து கொள்ள மற்ற மா.செ.க்கள், நிர்வாகிகள் ஒப்புக் கொள்வார்களா என்ற சந்தேகமும் உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இதனிடையே மற்றொரு செய்தி கசிந்து வருகிறது.. மதிமுகவின் அதிருப்தி தலைகள், ஒருசில மாதங்களுக்கு முன்பேயே திமுகவுக்கு தூது அனுப்பியதாக கூறப்படுகிறது.. ஆனால், திமுக மேலிடம் இதை விரும்பவில்லையாம்.. அவர்களை மட்டுமல்ல, மதிமுக என்ற கட்சியே தற்போது தங்கள் கூட்டணியில்தான் உள்ளதால், அந்த கட்சியின் அதிருப்தி நிர்வாகிகளை சேர்த்து கொள்வது சரியல்ல என்று நினைக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்..

தர்மசங்கடம்
ஒருவேளை வைகோ இந்த விஷயத்தில் முடிவெடுத்து, மதிமுகவை திமுகவுடன் இணைக்கலாம் என்று அறிவித்தால், நிச்சயம் அதை வரவேற்கவே செய்வார் முதல்வர் என்கிறார்கள். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இதுபோன்ற ஒரு சூழல் சில மாதங்களுக்கு முன்பு, தேமுதிகவிலும் ஏற்பட்டது..

விஜயகாந்த்
ஆனால், தன் நண்பர் விஜயகாந்த் மனம் நோகும்படி யாரும் எதுவும் செய்யக்கூடாது என்று தன் மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.. விஜயகாந்த் நண்பர் என்ற ரீதியில் அப்படி முடிவெடுத்திருந்த நிலையில், வைகோ, சொந்த கட்சி கூட்டணியில் உள்ளார் என்ற ரீதியில் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனிடையே, இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிப்தியாளர்கள் மீண்டும் அறிவாலயம் நோக்கி நடப்பார்களா? என்ற சந்தேகம் கிளம்பி வருகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications