உங்க சேமிப்பு கணக்கில் ரூ.1 லட்சம் இருக்கா? 10 ஆண்டில் என்னவாகும் தெரியுமா? காத்திருக்கும் அதிர்ச்சி
சென்னை: வங்கிக் கணக்கில் பணத்தை சேமிப்பது என்பது பாதுகாப்பான ஒன்றாகத் தோன்றினாலும், நீண்ட கால அடிப்படையில் அது உங்கள் செல்வத்தின் மதிப்பை மெல்ல மெல்லக் குறைக்கும் ஒரு மறைமுகமான இழப்பாகவே பார்க்கப்படுகிறது.. பொதுவாகச் சேமிப்புக் கணக்குகளில் (Savings Account) வழங்கப்படும் வட்டி விகிதம் என்பது ஆண்டுக்கு சுமார் 3% முதல் 4% வரை மட்டுமே இருக்கிறது.. ஆனால், நாட்டின் பணவீக்கம் (Inflation) இதைக் காட்டிலும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நீங்கள் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த ரூபாயின் உண்மையான வாங்கும் திறன் 10 ஆண்டுகளில் பெருமளவு சரிந்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்..

சேவிங்ஸ் அக்கவுண்ட்
உதாரணமாக, இன்று ஒரு லட்சம் ரூபாய்க்கு நீங்கள் வாங்கக்கூடிய பொருட்களின் அளவு, அதே ஒரு லட்சம் ரூபாயைக் கொண்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு வாங்க
முடியாது.. பணவீக்கம் என்பது பொருட்களின் விலையேற்றம் மட்டுமல்ல, அது உங்கள் பணத்தின் மதிப்பை அரிக்கும் ஒரு காரணியாகும்.. அதனால் நீங்கள் வங்கியில் ஒரு லட்சம் ரூபாயைச் சேமித்து வைத்தால், அதற்கு வட்டி கிடைப்பது உண்மைதான் என்றாலும், அந்த வட்டி விகிதம் பணவீக்கத்தை விடக் குறைவாக இருக்கும்போது அது தொழில்நுட்ப ரீதியாக உங்களுக்கு ஒரு நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது
சேமிப்பு கணக்கு நன்மைகள்
இருந்தாலும் சேமிப்பு கணக்கை பயன்படுத்துவதில் பல முக்கியமான நன்மைகளும் வசதிகளும் ஒளிந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.. ஒரு அவசரக் காலத் தேவை ஏற்படும்போது, கையில் உடனடியாகப் பணம் கிடைப்பதற்குச் சேமிப்புக் கணக்குதான் மிகச் சிறந்த வடிகாலாக இருக்கிறது.
பங்குச்சந்தை அல்லது ரியல் எஸ்டேட் முதலீடுகள் போலன்றி, இதிலிருந்து எந்த நேரத்திலும் ஏடிஎம் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.. மேலும், வங்கியில் உங்கள் பணம் திருடுபோகும் அபாயம் மிகக் குறைவு என்பதோடு, வங்கியின் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வசதிகளும் உங்களுக்குக் கூடுதல் நிம்மதியைத் தருகின்றன.
மின்சார கட்டணம்
நவீன வங்கிச் சேவைகளான யூபிஐ (UPI), மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குச் சேமிப்புக் கணக்கு ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கிறது.. இது உங்கள் அன்றாடச் செலவுகளை மேலாண்மை செய்யவும், மின்சாரம் மற்றும் இதர கட்டணங்களைச் சிரமமின்றிச் செலுத்தவும் வழிவகை செய்கிறது..
எனவே உங்கள் உபரிப்பணம் முழுவதையும் சேமிப்புக் கணக்கிலேயே முடக்கி வைப்பது பொருளாதார ரீதியாக புத்திசாலித்தனம் கிடையாது என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்..
ஓரளவிற்குத் தேவையான பணத்தை அவசரத் தேவைகளுக்காகச் சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை நிலையான வைப்பு நிதி (FD), மியூச்சுவல் ஃபண்ட் அல்லது தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் பணவீக்கத்தை முறியடிக்க முடியுமாம்..
சேமிப்பு பாதுகாப்பு
அதாவது பணத்தைச் சேமிப்பது மட்டும் போதாது, அதைச் சரியான இடத்தில் வளரச் செய்வதே நிதி சுதந்திரத்திற்கான வழியாகும் என்பதே வல்லுநர்களின் அறிவுறுத்தலாகும்..
வங்கி சேமிப்புக் கணக்கு என்பது ஒரு பாதுகாப்பான தங்குமிடமே தவிர, அது பெரும் லாபம் தரும் முதலீட்டுத் தளம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.. உங்கள் கடின உழைப்பின் பலனான பணம் அதன் மதிப்பை இழக்காமல் இருக்க, நவீன முதலீட்டு முறைகளை நோக்கி நகர்வதே தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்..!!!
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications