ஒன்று போல பேசிய எடப்பாடி - அமித் ஷா.. மாறிய காட்சிகள்.. நிர்கதியாக்கப்படும் ஓபிஎஸ்? என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடக்கத்தில் இருந்தே பாஜகவை ஆதரித்த ஓபிஎஸ் நிலை என்ன ஆகும்? அவர்களை நம்பி இருந்த ஓபிஎஸ் என்ன செய்வார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமித் ஷா வந்திருந்தார். இந்த நிலையில் அவரை தனியாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை.

மாறாக அந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதில் அமித் ஷாவை சாதித்த ஓ பன்னீர்செல்வம் அவருக்கு கை கொடுத்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

செல்லவில்லை

செல்லவில்லை

அமித் ஷாவை தனியாக சந்திக்க அனுமதிக்கவில்லை என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று கூறப்பட்டது. அதேபோல் முதல்நாள் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி ஓபிஎஸ், எடப்பாடி இருவரையும் ஒன்றாக சந்தித்தார். இவர்களுக்கு ஒன்றாக மரியாதையை கொடுத்தார். ஓ பன்னீர்செல்வமுடன் தன்னை சேர்த்து வைத்து ஒரே மாதிரி நடத்தியதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அமித் ஷாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முக்கியமான ஸ்டேட்மென்ட் ஒன்றை கொடுத்ததாக தெரிகிறது.

 எடப்பாடி பதில்

எடப்பாடி பதில்

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம்.. சென்னை வந்த அமித் ஷாவை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா வரும்போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது தமிழக பாஜகவை மட்டுமல்ல ; பாஜகவின் தேசியத் தலைவர்களைக்கூட கோபப்பட வைத்திருக்கிறதாம்.

 இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம்

இன்னொரு பக்கம் எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கும் இடையிலும் கூட மோதல்கள் வந்தன. பாஜக நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எடப்பாடி - அண்ணாமலை இடையே உரசல் ஏற்பட்டது . இப்படிப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மட்டும் பாஜகவை ஆதரித்து வந்தார். பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். குஜராத் முதல்வர் பதவி ஏற்பிற்கு சென்றார். அமித் ஷாவை சந்தித்தார். மோடியை சந்தித்தார். மீண்டும் குஜராத் சென்றார். அண்ணாமலையை கூட சந்தித்தார். முடிந்த அளவு பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்து கொண்டார்.

பாஜக

பாஜக

முடிந்த அளவு பாஜக தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் காட்டிக்கொண்டுதான் இருந்தார். ஆனால் அவருக்கு இதனால் பெரிதாக பலன் எதுவும் கிடைக்கவில்லை. அதிமுகவில் தொட்டதெல்லாம் தோல்வி.. பட்டதெல்லாம் காயம் என்ற கடும் விரக்தியோடு சுற்றிக்கொண்டு இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். முதலில் கட்சி நிர்வாகிகள் சப்போர்ட் இல்லாமல் போனது, பின்னர் பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அந்த பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்டது. பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின் இரட்டை இலை சின்ன வழக்கில் தோல்வி அடைந்தது. பின்னர் பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்தது என்று ஓ பன்னீர்செல்வம் தொட்டதெல்லாம் கடந்த சில மாதங்களாக தோல்வியில்தான் முடிந்துள்ளது. பாஜகவை ஆதரித்தும் கூட இவருக்கு பெரிதாக நன்மை எதுவும் கிடைக்கவில்லை.

நிர்கதி

நிர்கதி

தற்போது முத்தாய்ப்பாக எடப்பாடி - அமித் ஷா ஒரே குரலில் பேச தொடங்கி உள்ளனர். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர் தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

 எடப்பாடி கூட்டணி

எடப்பாடி கூட்டணி

இதையடுத்து கூட்டணி பற்றி பேசிய அமித் ஷா.. நாங்களும் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம். இதை முன்பில் இருந்தே சொல்லி வருகிறோம் என்று கூறினார். ஓபிஎஸ் இல்லாத நிலையிலும் கூட பாஜக - அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படாமல் இவர்கள் ஒற்றுமையாக இருப்பதையே இந்த ஸ்டேட்மென்ட் காட்டுகிறது. முக்கியமாக அமித் ஷா தரப்பு எடப்பாடியை ஏற்றுக்கொண்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தொடக்கத்தில் இருந்தே பாஜகவை ஆதரித்த ஓபிஎஸ் நிலை என்ன ஆகும்? அவர்களை நம்பி இருந்த ஓபிஎஸ் என்ன செய்வார்? ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+