ரியல் துரந்தர் பிரேமலதா? 2026 தேர்தலில் செய்த மிகப்பெரிய சொதப்பல்கள்
சென்னை: அண்மையில் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் இருக்கும் போதே தேமுதிக தலைவர் பிரேமலதா பேசிய பேச்சு திமுகவை தூக்கி வாரிப்போட்டது. அதேபோல் அண்மையில் அண்ணன் ஸ்டாலின் என்று கூறுவதற்கு பதில், அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்..அப்புறம் சட்டென மாற்றி பேசினார். அதேபோல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று பிரேமலதா பேசியது..திருமாவளவன் கூப்பிடும் போது எழுந்து நிற்காமல் இருந்தது என இந்த தேர்தலில் பிரேமலதாவின் செயல்களை இந்த பதிவில் பார்ப்போம்
தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுக மற்றும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பிரேமலதா, திடீரென திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தார். "கலைஞர் மீது கேப்டனுக்கு அதிகப் பாசம் உண்டு" என்று காரணம் சொன்னார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர், இப்போது அதே கட்சியுடன் இணைந்தது சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை.. இதுதான் முதல் முரண்..

எழுந்திருக்காத பிரேமலதா
அடுத்தாக கடலூரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதனால் அவரும் பங்கேற்றார். மேடையில் திருமாவளவன் பேசினார். ஒவ்வொரு வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
திருமாவளவனுக்கு தர்ம சங்கடம்
திருமாவளவன் வேட்பாளர்களின் பெயரை சொல்ல சொல்ல அவர்கள் எழுந்து மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர். பிரேமலதா பெயரை சொன்னபோது அவர் எழுந்து நிற்கவில்லை. அதேவேளையில் லேசாக சிரித்தபடி இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்.இதுதொடர்பான வீடியோ தான் இணையதளங்களில் பரப்பப்பட்டு சர்ச்சையானது. அதேநேரம் ஸ்டாலின் அறிமுகம் செய்தபோது மட்டும் எழுந்து நின்றதாக விமர்சனங்களும் எழுந்தன. இதனால் விசிகவினர் சமூக வலைதளங்களில் பிரேமலதாவுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து இருவரும் போனில் பேசிய பின்னர் நிலைமை சரியானது.
ஒரே குற்றச்சாட்டு
அடுத்ததாக சேலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் இருக்கும்போதே, "தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன" என்று பிரேமலதா பேசினார். அப்போது அவர் கூறும் போது, தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் எங்க அண்ணன் மேல இருக்கு.. அதையும் பெண்கள் கூட்டத்துல சொல்கிறேன்.. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை. போதை கலாச்சாரம் இருக்கு... அதனை தவிர வேறு என்ன சொல்ல முடியும்? வேற ஒண்ணும் சொல்ல முடியாது..இந்த ஆடசி மேல" என்று கூறியதுமே ஸ்டாலின் உள்பட மேடையில் உள்ள அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்கள்.
சமாளித்த பிரேமலதா
சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை பேசி வந்த நிலையில், அவரது முன்னிலையிலேயே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பொருளில் வெளிப்படையாக பிரேமலதாக பேசியதை பாஜக, அதிமுகவினர் பாராட்டினார்கள். இதனால் பிரேமலதா மீம்ஸ் கண்டெட் ஆக மாறினார் . பின்னர் இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, "சிறு பிரச்சனைகளுக்குக் கூட முதல்வர் தீர்வு காண்பார் என்றே கூறினேன்" என்று சமாளித்தார்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி
அதேபோல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பிரேமலதா ஒரு முறை, அண்ணன் ஸ்டாலின் என்பதற்கு பதிலாக அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று புகழ்ந்திட போனார். சட்டென வார்த்தை தவறி வந்ததை, அப்படியே எடப்பாடி பழனிசாமி என்பதற்கு பதில் ஸ்டாலின் என்று மாற்றி பேசினார்.. இதையும் எதிர்க்கட்சிகள் சும்மாவிடவில்லை..
திருப்பரங்குன்றம் 'தீபம்' சர்ச்சை
திருப்பரங்குன்றம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்" என்று பிரேமலதா பேசியது விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் கூட்டணி கட்சிகளாக திமுக, காங்கிரஸ், விசிக உள்படமொத்த கட்சிகளுமே வேறு நிலைப்பாட்டில் உள்ளன.இதனால் திமுக தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரேமலதாவை ரியல் துரந்தர் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு நிலைமை இருந்தது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications