Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவன் கேட்கும் மதுவிலக்கு உண்மையில் சாத்தியமா.. திமுக தயங்குவதன் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்குள் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் திமுக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதுவிலக்கு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார். ஆனால் இதே முழக்கத்துடன் ஆட்சியமைக்க ஸ்டாலின் 2016ல் பிரச்சாரம் செய்த போது, தோல்வி அடைந்தார். மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொன்னதால் தான் குடிமகன்களால் தோற்கடிக்கப்பட்டதாகவே திமுக இன்று வரை கருதுகிறது.. மதுவிலக்கு உண்மையில் சாத்தியமா என்பதை பார்ப்போம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடந்தது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் இந்த மாநாடு நடந்தது. மாநாட்டில் திருமாவளவன் பேசுகையில், "இந்த மாநாடு தேர்தலுக்காக நடத்தப்படவில்லை. அரசியல் உள்நோக்கம் கொண்ட மாநாடும் கிடையாது.

thirumavalavan tasmac

போதை பொருட்களை கள்ளசந்தையில் விற்பனை செய்ய ஒரு பெரிய நெட்வொர்க் நம்முடைய நாடு முழுவதும் செயல்படுகிறது. இதில் கோடிகணக்கில் பணம் சுரண்டப்படுகிறது. இதை யாராலும் கட்டுப்படுத்த இயலவில்லை இதை தடுக்க வேண்டுமா இல்லையா. இதற்காக குரல் கொடுக்க ஜனநாயக சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

திமுகவுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தானே கடைகளை கொண்டு வந்தார் என்று பலரும் சொல்கிறார்கள். இது உண்மைதான், ஆனால், அப்போது மதுவிலக்கு நடைமுறை படுத்துகிற மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், மத்திய அரசு இழப்பீட்டு நிதியை வழங்க வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசிடம் அவர் கேட்டார். நெருப்பு வளையத்துக்கு நடுவில் கற்புரம் சிக்கி கொண்டது போன்றது போன்று வேறு வழியின்றி நான் மதுக்கடைகளை திறந்தேன் என்று கருணாநிதி சொன்னார். அதை சரி சென்று நியாயப்படுத்தவில்லை.

ஆனால் அதே கருணாநிதி தான் 1974-ம் ஆண்டு கடைகளை மூடினார். அப்போது சொன்னார் தேசிய அளவில் மது விலக்கு கொள்கை தேவை என்றார். அதுதான் நான் வைக்கின்ற கோரிக்கையும் கூட.. அதன் பின்னர் மதுக்கடைகளை திறந்தது, யார் டாஸ்மாக் என்கிற நிறுவனத்தை உருவாக்கியது யார்?. யாரும் இதை பேசுவது இல்லையே. இதில் எம்.ஜி.ஆருக்கு என்ன பங்கு, ஜெயலலிதா என்ன செய்தார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகா இந்த கடைகளை திறந்தார்? என்கிற கேள்வி எழுகிறது.

எம்.ஜி.ஆர். காலத்தில் மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டது, ஜெயலலிதா காலத்தில் சட்டப்பூர்வமாக்கியது அது தொடர்கிறது, அது தொடரும்போது மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகி உள்ளார். இவர் புதிதாக கடைகளை திறக்கவில்லை, உருவாக்கவில்லை. முதல்வரை நான் சந்தித்தபோது நான் என்ன மூடக்கூடாது என்று நினைக்கிறேனா நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது பார்ப்பாம் என்றார். மதுவிலக்கு பற்றி திருமாவளவன் ஏன் மோடியிடம் கேட்கிறார் என்கிறார்கள். 2 கோரிக்கைகள் தான் வைக்கிறோம், தமிழக அரசுக்கு மதுக்கடைகளை மூடு, மத்திய அரசிடம் இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு தேசிய மதுவிலக்கு கொள்கையை வரையறுத்து சட்டம் இயற்றுவது அவ்வளவு தான்" இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

மேலும் சட்டமன்ற தேர்தலுக்குள் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் திமுக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மதுவிலக்கு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார். திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகு மதுவிலக்கு குறித்த கேள்வி அதிகரித்துள்ளது. உண்மையில் கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.

ஆனால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்து தனித்து நின்ற அதிமுக தான் ஜெயித்தது. திமுக தோல்வி அடைய உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று சொன்னதுதான் காரணம் என திமுகவினர் இன்று வரை நம்புகிறார்கள், திமுக தோற்க மக்கள் நலக்கூட்டணி உள்பட பல காரணம் இருந்தாலும், மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று சொன்னதால் குடிமகன்கள் ஓட்டு திமுகவிற்கு விழவில்லை என்பது இன்று வரை திமுகவினருக்கு ஆதங்கமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். முன்னதாக தேசிய அளவில் மதுவிலக்குக் கொள்கை வகுப்பப்பட வேண்டும்; அவ்வாறு வகுக்கப்பட்டால் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தயார் என்று அமைச்சர் முத்துசாமி கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில் மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுக்கடைகளை திறப்பது, மூடுவது, மது ஆலைகளை திறப்பது, மூடுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கடந்த வாரம் கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ்,மாநில அரசு தான் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை வகுக்க வேண்டும்; தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.

இதே கருத்தை தான் அன்புமணி ராமாஸ் இன்று கூறினார். இதுபற்றி அவர் கூறும் போது, தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல்தான். அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முழங்கும் திமுக, மக்கள் நலனுக்காக மதுவிலக்கு கேட்டால், மத்திய அரசை கேளுங்கள் என்பதும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும் மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றும் செயல்கள் என்று கூறினார்.

தற்போதைய நிலையில் மதுவிலக்கு சாத்தியமா என்றால், அது நிச்சயம் சவாலானது.. நிதி இழப்பு மற்றும் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க மாற்று வழிகளை அரசு உருவாக்க வேண்டும். 2023-24 நிதியாண்டில் டாஸ்மாக் மூலாம் தமிழ்நாடு அரசுக்கு 27.4 சதவீதம் வரி பங்களிப்பு கிடைத்துள்ளது.. இந்த வருவாய் இழப்பை தடுக்க அரசு மாற்று வழிகளை உருவாக்க வேண்டும்.

அதேபோல் மதுவிற்கு தடை விதித்து கள்ளுக்கு அனுமதி கொடுத்தால் , அதில் போதை அதிகரிக்க ரசாயணங்களை கலப்பார்கள் என்றும், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அரசின் கருத்தாக உள்ளது. அதேபோல் மதுவிலக்கு ஏற்கனவே அமலில் உள்ள மாநிலங்களில் அடிக்கடி கள்ளச்சாரய மரணங்கள் ஏற்படுகிறது. மதுவிலக்கு அமலுக்கு வந்தால் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமிடனறி மதுவிலக்கை அமல்படுத்தினால் 2016 பாணியில், 2026ல் திமுகவிற்கு அரசியல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இப்படி பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+