Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இது பேரிடர்தான் சந்தேகமே இல்லை”.. தரவுகள் சொல்லும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரணம் வருமா? வராதா? என்ற விவாதம் மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் என்பது தேசிய பேரிடரா? இல்லையா? என்ற கோணத்தில் விவாதம் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தைத் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதைப்போன்று இதுவரை மத்திய அரசு அறிவித்தே இல்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.

Is the flood damage in Tamil Nadu Natural Notional disaster or not?

அதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 'வழங்குவதற்கு நிதியில்லை என்று சொல்வதற்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நீர்நிலை பற்றி விசயங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் பத்திரிகையாளர் அய்யநாதன் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Is the flood damage in Tamil Nadu Natural Notional disaster or not?

"சென்னையில் பெய்த மழை பேரிடர்தான். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். இது மிகப் பெரிய பேரிடர்தான். அதில் சந்தேகம் வேண்டாம். அதை அனுபவித்த மக்களுக்குத்தான் தெரியும்.

சில ஆண்டுகளாக மழையின் அளவு அதிகமாகி இருக்கிறது. ஆனால், அந்த நீரைச் சேமிப்பதற்கு நம்மிடம் உரிய அளவிலான வசதிகள் இல்லை. எளிமையாகச் சொன்னால் ஏரிகள் இல்லாமல் போய் இருக்கிறது. அதன் விளைவைத்தான் சென்னை சந்தித்து வருகிறது.

உடனே எல்லோரும் என்ன கேட்கிறார்கள். முறையான மழைநீர் வடிகால்கள் வசதி செய்யப்படவில்லை. நீங்கள் செய்தீர்களா என்று அரசை நோக்கிக் கேட்கிறார்கள். சரி, அதைப் பற்றி நாம் பேசுவோம்.

என்ன நடந்தது? முதலில் அதைப் பேசுவோம். 4 ஆம் தேதி முழுவதும் கடுமையான மழை. விடிய விடியப் பெய்தது. விடாமல் பெய்தது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மொத்த ஏரியா எவ்வளவு? அதற்குள் எவ்வளவு மழை பெய்திருக்கிறது? அதை நாம் முதலில் அலசி ஆராய வேண்டும். சென்னையில் மொத்த பரப்பளவு 1189 சதுர கி.மீட்டார். இந்தப் பரப்பளவு முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரே அளவில் பெரிய மாறுபாடு இல்லாமல் பெய்தது.

Is the flood damage in Tamil Nadu Natural Notional disaster or not?

அதில் குறைந்த பட்சம் ஒரு பகுதியில் 20செ.மீட்டர் எனக் கணக்கிட்டால், மொத்த பரப்பளவு 1189 சதுர கி.மீட்டாரில் 21240 கோடி லிட்டர் தண்ணீர் மழைப்பொழிவால் கிடைத்துள்ளது. அதாவது 24 டிஎம்சி தண்ணீர் மழையாகப் பெய்துள்ளது.

இதுதான் பிரச்சினை. ஒரே நாளில் இத்தனை டிஎம்சி தண்ணீர் பெய்தால் சென்னை எப்படித் தாங்கும்? இதில் நாம் சராசரியாகத்தான் 20செ.மீட்டர் எனக் கணக்கிட்டுள்ளோம். ஆனால், மண்டலத்திற்கு மண்டலம் மாறுபட்டுள்ளது. சில பகுதிகளில் 50செமீ மழை பெய்துள்ளது. சில இடங்களில் அதைவிட அதிகம் மழைப் பதிவாகி உள்ளது.

நாம் குறைந்தபட்ச கணக்கைத்தான் அளவீடாக எடுத்துக்கொண்டுள்ளோம். சென்னையில் மூன்று மாவட்டங்களில்தான் தண்ணீர் பிடிப்பு பகுதிகள் சுற்றி உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. இந்தப் பகுதிகளில்தான் ஏரிகள் உள்ளன. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், மதுராந்தகம் போன்ற பகுதிகளில்தான் பிரதான பெரிய ஏரிகள் உள்ளன. அதை விட்டால் சின்ன சின்ன ஏரிகள் சில இடங்களில் வருகின்றன.

Is the flood damage in Tamil Nadu Natural Notional disaster or not?

நதிகள் என்று எடுத்துக்கொண்டால், கொசத்தலையாறு, கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் இவைதான் பிரதானம். அந்த நதிகளிலும் பழைய அளவு இப்போது இல்லை. மிக அதிக அளவில் சுருங்கிவிட்டன. பல பகுதிகளில் பட்டா கொடுத்ததால் நதிக்கரைகளில் நிறைய வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.

அடையாறு நதி பாதையில் உள்ள ஆடு தொட்டியில் நின்று அதன் அளவை நீங்கள் கணக்கிட்டால், மூன்றில் ஒரு பகுதியாக அதன் அளவு சுருங்கிவிட்டது. அப்படி என்றால், ஒரு நொடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீரைக் கொண்டுபோய் கடலில் சேர்க்கும் இந்தப் பாதை பழுதுபட்டுவிட்டது.

இன்றைக்கு அடையாறு 30 ஆயிரம் கன அடி தண்ணீரை ஒரு நொடிக்குக் கொண்டுசெல்வதற்கே திணறுகிறது. அப்படியான பாதையில் மழைநீரின் அளவு அதிகமாகும் போது நீர்பிடிப்பு பகுதி போதாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுகிறது. நதியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக அதிகமாக முதல் மாடி அளவுக்கு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தின் மட்டம் உயர்ந்துவிடுகிறது.

Is the flood damage in Tamil Nadu Natural Notional disaster or not?

இது ஒரு பிரச்சினை இல்லையா? அதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா இல்லையா?

அடுத்துக் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஏரிகள் சென்னையைச் சுற்றி உள்ள 3 மாவட்டங்களிலிருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். அதில் எவ்வளவு ஏரிகள் உள்ளன? தெளிவான தரவு நம்மிடம் இல்லை. ஆக, மழைநீரை நிரப்பி வைத்துக்கொள்ளக் கூடிய ஏரிகள் இல்லை. அதனால் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வெள்ளம் வெளியேறுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியால் 6 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இப்படிப் பல ஏரிகள் பல மடங்கு டிஎம்சியை தேக்கி வைக்கின்றன. ஆனால், அந்த ஏரிகளின் பழைய பரப்பளவு இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம்.

இப்போது சொல்லுங்கள் இவ்வளவு மழை வெள்ளத்தையும் மழைநீர் கால்வாய்கள் தாங்குமா? ஊரே வெள்ளமாக ஓடினால், அந்தக் கால்வாயின் கொள்ளளவு போதுமானதாக இருக்குமா? அந்த அடிப்படை அறிவு இல்லாமல் வடிகால்கள் சரியாக இல்லை என்று சொல்பவர்களிடம் நாம் எப்படி வாதிடமுடியும்?” என்கிறார்

தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் தென்மாவட்டங்களில் உள்ள நதிகளில் எந்த வித ஆக்கிரமிப்புகளும் இல்லை. எல்லா ஆறுகளும் மிக அதிக அளவுக்கு வெள்ளத்தைத் தாங்கக் கூடியதாகவே உள்ளது. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாகத் தூத்துக்குடி உப்பாறு பகுதியில் மிக அதிக அளவில் தொழிற்சாலைகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதனால் ஆறு சுருங்கி உள்ளது.

தென்மாவட்டங்களில் ஒரே நாளில் 50 செமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இவ்வளவு மழையை எந்த நீர்நிலையாலும் தாக்குப்பிடிக்க முடியாது. ஆகவே, வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட்டது.

இந்த மழை என்பது வழக்கமான மழை இல்லை என்பது உறுதி. இது பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டுள்ள விளைவு. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95செமீ மழைப் பதிவாகி உள்ளது. இது சாதாரண மழையா? அதே மழை சென்னையில் பெய்திருந்தால் 3 மாடி வரை தண்ணீர் வந்திருக்கும் என்பதே உண்மை” என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+