தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
சென்னை: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டபிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அன்பில் மகேஷ் அளித்த பதிலை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.இந்த பள்ளி தேர்வு முடிகளை வெளியிட்டபிறகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் " நாம் ஏற்கனவே அறிவித்தபடி, கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும். இதுவரை அந்த முடிவில்தான் இருக்கிறோம். முதல்வர் அலுவலகத்தில் இதற்காக தனித்துறையே இருக்கிறது. அவர்கள் பள்ளி திறப்பு நேரத்தின்போது வெயிலின் தாக்கத்தை கணக்கிட்டு, அறிவுறுத்துவார்கள். அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு இருக்கும் என்று கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சுமார் 180 பேர் வேதியியல் தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும் போது, விழுப்புரம் செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வேதியியலில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ள விவகாரத்தில், மாணவ-மாணவிகள் 100 மதிப்பெண் எடுத்ததையும், அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் பாராட்டாமல், அதில் எதற்காக சந்தேகப்படுகிறீர்கள்.
அந்த குறிப்பிட்ட தேர்வு மையத்தில் கடந்த ஆண்டில் 91 முதல் 99 மதிப்பெண்களை 104 பேர் எடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் வினாத்தாள் கசிந்ததா? தேர்வு அறை மேற்பார்வையில் வேதியியல் பாடம் சார்ந்த ஆசிரியர்கள் பணியில் இருந்தார்களா? என்பது உள்ளிட்ட முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது என்றார்.
இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில், "இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் அரசு நிதியுதவி மூலம் படிக்க வைக்கப்படுகிறார்கள். அதற்கான நிதியாக ரூ.617 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதுபற்றி தலைமை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.
இதனையடுத்து நமது மாநில பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரும் டெல்லி சென்று இருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்ததும், இந்த ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் செயல்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை தெரிவிப்போம்" இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார். பள்ளிகள் திறப்பு
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதால், வெயிலின் தாக்கம் ஜூன் மாத தொடக்கத்தில் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 2ம் தேதி திறக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அரசு கோடை வெயிலை பொறுத்து இந்த மாத இறுதியில் முடிவெடுக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications