அரசு ஊழியர்களுக்கு அசத்தல் திட்டம்? இந்த அறிவிப்பு மட்டும் வந்தால் ஜாக்பாட்.. மோடியின் மெகா பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் சிபிஎஸ்இ ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் மத்திய அரசும் விரைவில் அகவிலைப்படியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.

Is union government planning to extent the retirement age for the CBSE school staffs?

அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.

அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இந்த மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதற்கு முன்பாக ​​ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை நாளை மத்திய அரசு வெளியிட உள்ளது.

இது அகவிலைப்படி உயர்வு தொடர்பான ரேங்கிங் ஆகும். இந்த ரேங்கிங் வைத்து அகவிலைப்படி எந்த அளவிற்கு உயர்த்தப்படும் என்று யூகம் செய்ய முடியும். வரும் 31ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் இந்த 2023ம் வருடம் திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.

முக்கியமாக ராஜஸ்தான் 224 சட்டசபை தொகுதிகளுக்கான பணிகளில் பாஜக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Is union government planning to extent the retirement age for the CBSE school staffs?

அந்த வகையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ ஊழியர்களுக்கு முக்கியமாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படுமா என்று எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ: அதன்படி சிபிஎஸ்இ ஊழியர்களுக்கு தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. இதை 62 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 வருடம் தங்களுக்கு வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை இவர்கள் வைத்து வருகின்றனர். அதே சம்பளத்துடன் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசும் இவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருகிறதாம். சிபிஎஸ்இ அரசு ஊழியர்களின் வாக்குகளை அள்ளும் விதமாக இந்த அறிவிப்பை அரசு வெளியிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+