Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிரிக்கும் "கொரோனா".. சூரியனை சுற்றி பெரும் சோலார் புயல்.. இஸ்ரோ ஆதித்யா எல்1க்கு ஆபத்து? திக்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியனில் இருந்து வெளியேறும் காந்தபுல கதிர்கள், சோலார் அலைகள் ஆதித்யா எல்1 ஐ பாதிக்கும் அபாயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

சூரியனில் இருந்து வெளியாகும் காந்தப்புயல் கதிர்கள், அலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுவாக சூரியனின் காந்த புலன்களுக்கு அருகே இருக்கும் வளிமண்டல பகுதிகள் அடர்த்தி குறைவாக இருக்கும். இவை குறைந்த வெப்பத்துடன், குறைந்த அடர்த்தியுடன் காணப்படும். இதன் காரணமாக சூரியனின் துருவ பகுதிகளில் உள்ள வளிமண்டலத்தில் சிறிய சிறிய துளைகள் காணப்படும்.

ISROs Aditya-L1 solar: The mission performs has to face a huge solar storm near the Sun

இதை Coronal holes என்று அழைப்பார்கள். இந்த துளை வழியாக சூரியனின் மின் காந்த அலைகள் வெளியேறும். இதைத்தான் solar wind என்று அழைப்பார்கள். இந்த solar wind பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு 2.9 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் செல்ல கூடியது. இந்த solar wind வெளியே வந்தவுடன் நமது சூரிய குடும்பத்தில் பல திசைகளுக்கு செல்லும்.

ஏன் நமது பூமியை நோக்கியும் கூட வரும். பூமி போன்ற அதிக மின் காந்த புலம் கொண்ட கிரகங்கள் இந்த solar windயை தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும். இது புவி காந்த புயலை ஏற்படுத்தும். இப்போது பூமியை நோக்கி வரும் solar wind காரணமாக பூமியில் லெவல் 1 புவி காந்த புயல் ஏற்படும்.

சூரியனை ஆராய்ச்சி செய்ய நாசா அனுப்பி இருக்கும் பார்க்கர் சோலார் ப்ரோப் இதே புயலை கடந்து சென்றுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்ய பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலத்தை நாசா அனுப்பி உள்ளது.

சமீபத்தில், நாசாவின் இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் தீவிர கரோனல் மாஸ் எஜெக்ஷன் (சிஎம்இ) எனப்படும் சூரிய புயலை எதிர்கொண்டுள்ளது. புயலை இந்த ப்ரோப் கடந்ததாக நாசா தெரிவித்து உள்ளது. நாசாவின் இந்த பார்க்கர் விண்கலம் இதுபோன்ற சோதனையைத் எதிகொள்வது இதுவே முதல் முறை. மேலும் அது புயலில் இருந்து தப்பித்து வெளியே வர முடிந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூரிய புயலை கடக்கும் போது சில முக்கியமான தரவுகளைச் சேகரித்து உள்ளது பார்க்கர். இருப்பினும், இத்தகைய புயல்கள் பார்க்கரின் பாகங்களை சேதப்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இஸ்ரோவின் ஆதித்யா-எல் 1 மிஷன் விண்கலம் சூரியனைக் ஆராய்ச்சி செய்ய நான்கு மாதங்களில் லாக்ரேஞ்ச் 1 புள்ளியில் அடையும் என்பதால், அதற்கும் இதேபோன்ற சம்பவம் ஏற்பட நேரிடும் என்ற அச்சம் உள்ளது.

அதாவது ஆதித்யா எல் 1ம் இதேபோன்ற புயலை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

ஆராய்ச்சி: கடந்த சில தினங்களுக்கு முன் விண்ணில் பாய்ந்தது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் பூமி சுற்றுபாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து சூரியனை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது.

சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. சூரியனை இது தொடாது. மாறாக சூரியனை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வரும். அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல என்ற திருக்குறள் போல.. சூரியனை அகலாமல்.. அணுகாமல் தூரத்தில் இருந்து தீ காய்வது போல ஆதித்யா எல் 1 சுற்றி வரும்.

எங்கே இருக்கும்?: இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. இரண்டின் பாதிக்கப்படலாம் சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.

கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்.

எப்படி செல்லும்?: நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 கருவிகள் இதில் சுமந்து செல்லப்பட உள்ளன. மின்காந்த துகள் மற்றும் காந்தப்புல அமைப்புகளை பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் விண்கலம் ஏழு பேலோடுகளை எடுத்துச் செல்கிறது.

நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதேபோல் ஐரோப்பாவும் எல்1 பாயிண்டிற்கு இதேபோல் விண்கலத்தை அனுப்பி உள்ளது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+