Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீர் வடிக்கும் ஐடி ஊழியர்கள்.. சமூக வலைதளங்களை புரட்டி போட்ட TCS ஊழியரின் வலி மிகுந்த கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறோம், ஒன்று நீங்களே தனிப்பட்ட காரணம் என கூறி வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள் 3 மாத சம்பளத்தோடு உங்களுக்கு ராஜினாமா கிடைக்கும், இல்லை என்றால் நாங்கள் உங்கள் மீது நெகடிவ் கடிதம் கொடுத்து வேலையை விட்டு நீக்குவோம் என்று டிசிஎஸ் நிறுவனம் கூறியதாக பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பதிவில் உள்ள தகவல்களை பார்த்த நெட்டிசன்கள், இது தான் ஐடி வேலைகளில் பிரச்சனை என்று விமர்சிக்கிறார்கள். அந்த கடிதத்தை பார்ப்போம்

இன்றைக்கு பலரும் ஐடி வேலையில் ஆர்வமுடன் சேருகிறார்கள். ஆனால் அவர்கள் இளமையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். ஆனால் 40 வயதை கடந்தால் வேலையில் நீடிப்பது அல்லது நல்ல ஊதியத்தில் வேலை செய்வது சவாலாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதேபோல் பல இளம் ஊழியர்களே வேலை இழப்பு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள பல ஐடி நிறுவனங்கள், ஒவ்வொரு வருடமும் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்வது போலவே, வேலையைவிட்டு நீக்கவும் செய்கின்றன. அண்மையில் டிசிஎஸ் நிறுவனம் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியது. அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

IT Layoffs TCS employee s heartbreaking letter to discuss social media

அரசு வேலைக்கு சமம்

ஏனெனில் ரத்தன் டாடா உயிருடன் இருந்த காலம் வரை டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை என்பது அரசு வேலைக்கு சமமாக கருதப்பட்டது. மிக அபூர்வமாகவே வேலையை விட்டு தூக்குவார்கள்.டிஎசிஎஸ் வேலை என்றால் பல இளைஞர்கள் பணி நிரந்தரம், நிம்மதியாக வேலை செய்யலாம் என்று நம்பிக்கையுடன் கூறுவார்கள். ஆனால் அண்மை காலங்களில் டிஎசிஎஸ்சும் மற்ற ஐடி நிறுவனங்களின் வரிசையில் இணைந்தது. டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலரை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்கள் உள்ளது. இதுபற்றி டிசிஎஸ் ஊழியர் ஒருவர் எழுதியதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதனை அப்படியே பார்ப்போம்.

ராஜினாமா கடிதம்

யார், பெயர் என்ன என்பது தெரியவில்லை.. பதிவு மட்டுமே வைரல் ஆகிறது. அது அப்படியே.. "நான் எனது ராஜினாமா கடிதத்தை டிசிஎஸ்-ல் மறுத்தேன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு என்னை ஆபீஸ் மீட்டிங்கில் ராஜினாமா செய்யும்படி கேட்டார்கள். நான் அதை மறுத்தேன். நான் அழுது கொண்டிருந்தேன், பயந்து போனேன். ஏனெனில் டிசிஎஸ் தான் எனது முதல் நிறுவனம். எனக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

IT Layoffs TCS employee s heartbreaking letter to discuss social media

வேலைக்கு சேர முடியாது

நான் ஒரு மூத்த ஊழியர் இல்லை, எனது பெயர் ராஜினாமா செய்ய வேண்டிய பட்டியலில் கூட இல்லை. ஆனால் இவர்கள், வேலை இல்லாமல் காத்திருக்கும் ஊழியர்களை முதலில் குறிவைக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எளிதான இலக்குகள். எந்தவொரு திட்டமும் எங்களைக் காண முடியாதபடி, எங்களின் சுயவிவரங்களை முடக்கி விடுகிறார்கள். எப்படியாவது எங்களால் தொடர்புகள் மூலம் ஒரு வேலையில் சேர்ந்தாலும், மனிதவளத் துறை (HR) அந்த திட்டத்தை அழைத்து, எங்களின் வேலை ஆர்டரை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

பல ஊழியர்களுக்கு நெருக்கடி

அடுத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்படியே சென்று கொண்டிருக்கிறேன். எனது கிளை அலுவலகத்தில், ராஜினாமா செய்ய மறுத்த பல ஊழியர்கள் உள்ளனர். மனிதவளத் துறை (HR) அவர்களை தினமும் கூட்டத்திற்கு அழைத்து, ராஜினாமா செய்யுமாறு கேட்டு, அவர்களின் சம்பளத்தை முடக்குவது, கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது, மோசமான விமர்சனங்களை வழங்குவது, இனிமேல் யாரும் வேலைக்குச் சேர்க்க மாட்டார்கள் என்பது போன்ற பல விஷயங்களைச் சொல்லி மிரட்டுகிறார்கள். ஆனாலும், அவர்கள் இந்த மிரட்டல்களை புறக்கணித்து மீண்டும் மீண்டும் போராடுகிறார்கள். 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, அந்த ஊழியர்கள் இன்னும் டிசிஎஸ்-ல் வேலை பார்க்கிறார்கள்.

பாதுகாப்பு இல்லை

இது ஒரு மன உளைச்சல், சித்திரவதை மற்றும் ஒரு நச்சுத்தன்மை மிகுந்த விஷயம் இது. மிகக் குறைந்த சம்பளத்தில் இருந்தாலும், அதன் வேலைக் கலாச்சாரம் மற்றும் வேலைப் பாதுகாப்பிற்காக நான் டிசிஎஸ்-ல் சேர்ந்தேன். ஆனால் ஏன் சேர்ந்தோம் என்று இப்போது நான் வருத்தப்படுகிறேன். நான் வேறு ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ரத்தன் டாடாவிற்குப் பிறகு, இந்த நிறுவனத்தில் குழப்பமான நிலை காணப்படுகிறது" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+