நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வரவேண்டும்.. இல்லையெனில் நடவடிக்கை.. ஆசிரியர்களுக்கு அரசு வார்னிங்!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பவிட்டால் கடுமையான அலுவலக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பவிட்டால் கடுமையான அலுவலக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். நாளை காலை 10 மணி வரை இவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த ஜாக்டோ ஜியோ தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது பெரிதாகி உள்ளது.

இதுவரை இல்லை
அரசு இவர்களின் போராட்டத்திற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. இது தொடர்பாக முறையான பேச்சுவார்த்தையும் இன்னும் நடக்கவில்லை. இதனால்தான் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். 6 நாட்களாக போராட்டம் நடக்கிறது.

தொடரும் என்று கூறுகிறார்கள்
இதனால் பல பள்ளிகளில் பாடம் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு இன்னும் ஏற்கவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

நாளை வரை கெடு
இந்த போராட்டம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்கு பணிக்கு திரும்ப வேண்டும். நாளை பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை ஏதும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. நாளை வரவில்லை என்றால் அவர்களின் இடம் காலியிடமாக கருதப்படும் என்று கூறியுள்ளார்.

தீவிரம்
ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களிடம் இடம் காலிப்பணி இடங்களாக கருதப்படும். காலிப்பணி இடத்தை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications