இனி முடங்க முடியாது.. வெளியே வரும் விஜய்.. ஜனநாயகன் பட ப்ரோமோஷன் பணிகள் தீவிரம்! திடுக் காரணம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தற்போது மீண்டும் திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார். 2026-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'ஜனநாயகன்' படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தீவிரமாக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று நேற்று வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 அன்று படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு விளம்பரப் பணிகளைத் தொடங்கி உள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) அவரை முதல்வர் வேட்பாளராக பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த போஸ்டர் வந்துள்ளது. வியாழக்கிழமை அன்று, கே.வி.என் பிக்சர்ஸ் நிறுவனம், விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' புதிய போஸ்டரை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டது. படத்தின் விளம்பரப் பணிகள் நவம்பர் 8 ஆம் தேதி முதல் பாடல் வெளியீட்டுடன் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் போஸ்டர்
முந்தைய பல போஸ்டர்களைப் போலவே, இந்த போஸ்டரிலும் விஜய் நீல நிற சட்டை மற்றும் ஏவியேட்டர் கண்ணாடிகளுடன், கூட்டத்தால் சூழப்பட்டு காணப்படுகிறார். 'ஜனநாயகன்' என்ற தலைப்பு பிரதிபலிப்பதைப் போல, இந்த போஸ்டர் விஜய்யை சாதாரண மனிதர்களின் தலைவராக நிலைநிறுத்துவதை போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. பொங்கல்/மங்கல் சங்கராந்தி விடுமுறை வெளியீடாக ஜனவரி 9 அன்று 'ஜனநாயகன்' திரைக்கு வர உள்ளது. அரசியலில் முழுமையாக இறங்குவதற்கு முன் விஜய்யின் கடைசி படமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.
இப்படத்தின் முதல் பாடல் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் வரை பல விளம்பர நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
கரூர் சம்பவம் விஜய்
சமீபத்தில் கரூரில் நடந்த சோக நிகழ்வு காரணமாக, 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தனி சந்திப்பை நடத்தினார். மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது கவனம் பெற்றது.
கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த விஜய்
அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK), இந்தச் சந்திப்புக்காக ஒரு ரிசார்ட்டில் 50 அறைகளை முன்பதிவு செய்திருந்தது. இதன் மூலம் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 37 குடும்பங்கள் இந்தச் சந்திப்புக்காக அழைத்து வரப்பட்டிருந்தன. விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயகன் விஜய்
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு, பொதுக்குழுவும் நடந்துவிட்டது. இதில் அஞ்சலி செலுத்தியதோடு..திமுகவையும் விஜய் விமர்சனம் செய்துவிட்டார் . இந்த பணிகள் எல்லாம் முடிந்ததாக விஜய் கருதுவதால்.. விஜய் தற்போது 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராகி வருகிறார். இத்தனை நாட்கள் கரூர் விவகாரம் காரணமாக ஜனநாயகன் பட ப்ரமோஷன் தொடங்காமல் இருந்தது. தற்போது அந்த பணிகள் தொடங்க உள்ளன.
இத்திரைப்படம் அவரது நடிப்பு வாழ்க்கையிலும், அரசியல் பயணத்திலும் ஒரு முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. அவரின் கடைசி படம் என்று ஜனநாயகன் திரைப்படம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
'ஜனநாயகன்' படக்குழு, நவம்பர் மாத தொடக்கத்தில் முதல் பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், வலுவான ப்ரோமோஷன் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகு, டீசர் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி, அவரது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அதோடு படத்தின் ஓடிடி ஒப்பந்தம் பிப்ரவரியில் இருப்பதால் ஜனவரியில் கண்டிப்பாக படத்தை வெளியிட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் விஜய் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கியே ஆக வேண்டும்.
விஜய்க்கு பறக்கும் கோரிக்கை
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீண்டும் வர வேண்டும். சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது..முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல் இருக்கட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பின்பும் கூட சினிமாவில் நடிக்கிறார். அடுத்த படத்தில் கூட அவர் சைன் செய்துள்ளார்.
அதிலும் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் 2 பாகங்களாக வருகிறது. விஜய் அப்படி நடிக்க வேண்டும். அதுவே தமிழ் சினிமாவிற்கு நல்லது. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது.. இதனால் தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும்.. அவர் ரிட்டையர் ஆக கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications