தொடையில் உள்ள புண் நடையில் காட்டும் என்பது பழமொழி! அமலாக்கத்துறையை வெளுத்து வாங்கிய ஜவாஹிருல்லா!
சென்னை: தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சஒழிப்புத் துறையினால் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தொடையில் உள்ள புண் நடையில் காட்டும் என்று பழமொழி உள்ளதாகவும் அதை போல் அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஏவல்துறையாக மட்டுமே இருப்பது நகைப்புக்குரியது எனவும் விமர்சித்துள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி என்பவர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றிய அங்கிட் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல்லில் தனி நபரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம்வாங்கிய போது கையும் களவுமாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் பிடிபட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த சம்பவம்நடந்தேறி இருப்பது கவனத்திற்குரியது. விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் ஒன்றில் நடவடிக்கையைக் கைவிட உறுதியளித்து ரூ.20 லட்சம் திவாரி லஞ்சம் கேட்டதாகத் தெரியவந்துள்ளது.
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சஒழிப்புத் துறையினால் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. தொடையில் உள்ள புண் நடையில் காட்டும் என்று பழமொழி உள்ளது.
அதைப்போலக் கடந்த மாதம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அமலாக்கத்துறையில் பணிபுரிந்த நாவல்கிஷோர் மீனா என்பவர் 15 லட்சம் லஞ்சம் பெற்றதாக ராஜஸ்தான் மாநில லஞ்சஒழிப்புத்துறை கைது செய்யப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது. லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஏவல்துறையாக மட்டுமே இருப்பது நகைப்புக்குரியது.












Click it and Unblock the Notifications