Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இடிக்குதே".. நீங்க அதை பாத்திருக்கீங்களா..ண்ணா.. பூங்குன்றனிடம் வேதனையுடன் கேட்ட ஜெய பிரதீப்.. ஓஹோ

ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், பூங்குன்றனுக்கு பதிலளித்து முகநூலில் கருத்தை பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கழக ஒருங்கிணைப்பாளராக என்னுடைய தந்தை பதவி ஏற்றபிறகு, அந்த பதவியில் அவர் சுதந்திரமாக செயல்பட முடிந்ததா? எவ்வளவு இடைஞ்சல்கள், குறுக்கீடுகள், சூழ்ச்சிகள், அவமானங்கள், பொய் குற்றச்சாட்டுகள் இருந்தன" என்று ஓபிஎஸ் மகனான, ஓ. ஜெயபிரதீப் வேதனை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

எனினும், அவ்வப்போது அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் பூங்குன்றனின் பதிவுகள் என்றாலே, மிகுந்த எதிர்பார்ப்பையும் சில சமயம் ஏற்படுத்திவிடும்.

 கமலாலயம்

கமலாலயம்

கடந்த சில காலமாகவே, அண்ணாமலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதுடன், சில அட்வைஸ்களையும் வெளிப்படையாகவே தந்து வருகிறார்.. இப்போது, அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நடந்து கொண்டிருக்கிறது.. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி கொள்வதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கட்சிக்காக இதனை விட்டுத் தந்ததாகவும் கூறியுள்ளார்.. இந்நிலையில், பூங்குன்றன் இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார்..

 பரதன் + ராமன்

பரதன் + ராமன்

அதில், "ஓபிஎஸ் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? அப்படி என்றால் இபிஎஸ் ராமன் ஆகிவிட்டாரா? விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா? எவ்வளவோ விட்டுக் கொடுத்த ஓபிஎஸ் அவர்கள், நீங்கள் எதை செய்தாலும் ஏற்றுக்கொண்டு வந்தார். உங்களது ஆசை என்னவென்று சொன்னால் ஓபிஎஸ் அவர்களிடம் பேசுவதற்கு நான் தயார். கழக நன்மைக்காக அவர் எதையும் விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு" என்பன முதல் பல்வேறு கருத்துக்களை பூங்குன்றன் அதில் பதிவிட்டிருந்தார்.

 ஜெயபிரதீப்

ஜெயபிரதீப்

இந்நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பூங்குன்றனுக்கு பதிலளித்து வேதனையுடன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.. அதில், "அண்ணன் பூங்குன்றன் அவர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்.. தர்மத்தின் படி செயல்படும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பரதனாக விட்டுக் கொடுக்கலாம்.. ஆனால் தர்மத்திற்கு எதிராக செயல்படும் ஒரு சில தலைமை கழக நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க விட்டுக் கொடுத்ததினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்சி எவ்வளவு பெரிய பாதாளத்திற்கு சென்று இருக்கிறது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும்.

 18 வருஷங்கள்

18 வருஷங்கள்

நமது அம்மா அவர்கள் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட பொறுப்பை ஐயா அவர்கள் சரியாக செய்யவில்லை என்று திரும்ப பெற்றதாக வரலாறு கிடையாது என்பது 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மாவிடம் பணியாற்றிய தங்களுக்கு நன்றாக தெரியும். ஐயா அவர்கள் தனக்கென்று இந்த பதவி வேண்டும் இந்த பொறுப்பு வேண்டும் என்று தான் சார்ந்த தலைமையிடம் கேட்டு நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

 கட்சி + ஆட்சி

கட்சி + ஆட்சி

அவர் வகித்த பதவிகள் அனைத்தும் அவருடைய உழைப்பு விசுவாசத்தை பார்த்து தானாக வந்தது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். உழைக்கும் உண்மை தொண்டனுக்கு அங்கீகாரம் என்பது தான் வகிக்கும் பதவியில் அல்ல, மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையான அன்பில் தான் இருக்கிறது. கட்சியிலும் ஆட்சியிலும் உயர்ந்த பதவியை அம்மா அவர்கள் வழங்கிவிட்டார்கள். அவர் விரும்புவது பதவியல்ல, கழகம் ஒன்றுபட்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான்.

 இடைஞ்சல்கள்

இடைஞ்சல்கள்

கழக ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்ற பிறகு அந்தப் பதவியில் அவர் சுதந்திரமாக செயல்பட முடிந்ததா? எவ்வளவு இடைஞ்சல்கள், குறுக்கீடுகள், சூழ்ச்சிகள், அவமானங்கள், பொய் குற்றச்சாட்டுகள் இருந்தன என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ராணுவ கட்டுப்பாட்டு உள்ள கட்சியில் முதன்மை தொண்டராக பணியாற்றியவர். ஐயா அவர்களிடம் முழு சுதந்திரத்துடன் கட்சியை கொடுத்துப் பாருங்கள் கழகம் அசுர வளர்ச்சியுடன் முன்னேறுவதை தாங்கள் காண்பீர்கள். கழக வளர்ச்சியே எங்களது லட்சியம். தங்களின் அன்புத்தம்பி வி.ப.ஜெய பிரதீப்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

சசிகலா

சசிகலா

அதுமட்டுமல்ல, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படாமல் இருக்க ஓபிஎஸ் விட்டுக்கொடுத்ததாகவும், ஆனால், எடப்பாடி பழனிசாமிதான் ஒன்றிணைய​ ஒத்துழைக்காமல் ​தற்போதுவரை கட்சி குழப்பத்துக்குக் காரணமாக ​இருந்துவருகிறார் என்றும் ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது.. ஆனால், ​சசிகலா​வுக்கு ​எதிராக தர்மயுத்தம் நடத்தி​ய ஓபிஎஸ், இப்போது அவருடனே சேர வேண்டும் எ​ன்ற நிலைப்பாட்டில்​ ​​​​ இருப்பதால்தான் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைய விரும்பவில்லை என்று மறு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஜெயபிரதீப் ஃபேஸ்புக் பக்கத்தில் மற்றொரு விளக்கம் அதுகுறித்து தந்துள்ளார்.

MLAக்கள்

MLAக்கள்

குறிப்பாக, ஓபிஎஸ், ஒருசில தலைமை நிர்வாகிகளின் வற்புறுத்தலால் தனது முதலமைச்சர் பதவியை கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு, கட்சிக்கு மிகப்பெரிய சோதனை வரப்போகிறது என்ற மனவருத்தத்துடன் ​ஜெயலலிதா ​ நினைவிடத்தில் ​வைத்து ​உண்மை நிலவரத்தைத் ​தெரிவித்தார். சுயநலத்தோடு பதவிக்காக அங்கு சென்றார் என்றால், ​எம்எல்ஏக்களை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் அல்லது தன்னுடைய ஆதரவாளர்களுடன் அங்கு சென்று அமர்ந்து அரசியல் செய்திருக்கலாம்​.​ ஆனால்,​ அதை அவர் ​ செய்யவில்லை. ​தனி ஒருவராக அங்கு சென்று தன்னுடைய மனதில் தோன்றிய கருத்தை​த் தெரிவித்தார்.

 சைலண்ட் பன்னீர்

சைலண்ட் பன்னீர்

அந்தப் பிரச்னையை அப்போதே கலந்து பேசி, சரி செய்திருந்தால் பிரச்னைகள் அன்றே முடிவுக்கு வந்திருக்கும். ​ஆனால், ஓபிஎஸ், திமுகவுடன் தொடர்புவைத்துக்கொண்டு, கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று அவரைக் கட்சியிலிருந்து நீக்​கி​​ அறிக்கை வெளியிட்டனர். அதற்குப் பிறகு​ம் அமைதியாக இருந்தால் கட்சிக்கு நல்லதில்லை என்றுதான் ​தர்மயுத்தத்தைத் தொடங்கினார்... அனைத்துச் செயல்களிலும் நிறைகளும் குறைகளும் நிறைந்திருக்கும்​; நல்லது கெட்டதும் நிறைந்திருக்கும். அதைத் தலைமை நிர்வாகிகள் உணர்ந்து குறைகளை நிவர்த்திசெய்து நிறைகளைப் பாராட்டி, அடுத்து வரும் காலங்களில் கட்சியின் நலன் கருதி​ ​அனைவரும் ஒன்றிணைந்து​ ​செயல்பட​ வேண்டும்" என்று விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+