Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணி அவ்வளவுதான்! ராகுல் ஏஜெண்டாக மாறி திருமா செய்யும் நச்சு அரசியல்- டெல்லி ராஜகோபாலன் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கும் விஜய் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த அரசியல் ரீதியான மாற்றத்திற்கான தொடக்கமாக அமையுமா என்ன என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் டெல்லி ராஜகோபாலன் நமது ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே விரிசில் வந்துவிட்டது என்று கூறும் டெல்லி ராஜகோபாலன், ராகுல் காந்தியின் ஏஜெண்டாக திருமா செயல்படுகிறார் என்ற சந்தேகம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

thirumavalavan dmk rahul gandhi

மேலும், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வந்துவிட்டால் போதும் மளமளவென அனைத்து கட்சிகளும் வெளியேறிவிடும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

டெல்லி ராஜகோபாலன்: இது தொடர்பாக மூத்த செய்தியாளர் டெல்லி ராஜகோபாலன் நமது ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில், "திமுக கூட்டணியில் ஏற்கனவே விரிசல் வந்துவிட்டது என்பதே உண்மை. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பும் திருமாவளவன் இதேபோன்ற ஒரு கபட நாடகத்தை நடத்தியிருந்தார். அதிமுக கூட்டணிக்குள் வருவது போலவே ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். ஆனால், அதை திமுக சரியாகக் கையாண்டது. இதனால் எதுவும் நடக்கவில்லை.

2024 லோக்சபா தேர்தல் என்பது ஒரு திமுக அரசின் மதிப்பீடு போல.. கொண்டு வந்த திட்டங்களால் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்குப் பிறகு மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. தமிழக அரசியலும் மாறியது. இது ஒரு புறம் இருக்க திருமாவளவன் திரைமறைவாக சில செயல்களைச் செய்து வருகிறார். ராகுல் காந்தியின் ஏஜெண்டாக திருமா செயல்படுகிறாரோ என்ற பேச்சு ஏற்கனவே எழுந்துவிட்டது.

ராகுல் காந்தி: லோக்சபா தேர்தலில் 99 இடங்களில் மட்டுமே பெற்ற போதிலும் மிகப் பெரிய வெற்றியை அடைந்துவிட்டதாக ராகுல் நினைக்கிறார். இதனால் மம்தா, உத்தவ் தாக்கரே, கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து மாநிலக் கட்சிகளையும் அவர் ஒடுக்கப் பார்க்கிறார். இதனால் காங்கிரஸில் இருந்து திமுக விலகப் பார்க்கிறது. இதைத் தான் திருமாவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.

கே.என். நேரு பேச்சுகள் கொஞ்சம் அதிர்ச்சியைத் தருகிறது. 2026 தேர்தலில் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் போகலாம் என்கிறார். அதன்படியே திமுகவுக்கு விசிக மூலம் இழப்பு ஏற்படும். கூட்டணியை விட்டு விலகும் போது விசிக தனியாகப் போகாது. காங்கிரஸையும் நிச்சயம் உடன் அழைத்துச் செல்லும். ராகுல் காந்தி சொல்வதையே திருமாவளவன் கிளிப் பிள்ளையைப் போலத் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். தலித் முதல்வர் குறித்து ராகுல் காந்தி உத்தரவின் பெயரிலேயே திருமாவளவன் பேசுவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

பூகம்பம் கிளம்பும்: இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது சொல்கிறேன். விசிக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியும் விஜய்யும் கலந்து கொண்டால் அது தமிழக அரசியலை மொத்தமாக மாற்றும். 1998ல் சோனியா காந்திக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே ஒரு டீ பார்ட்டியை ஏற்பாடு செய்வதாகச் சுப்பிரமணிய சாமி சொன்னார். உடனே அப்போது ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி கவிழ்ந்துவிட்டது. கிட்டதட்ட அதைத் தான் திருமா செய்கிறார். அவரது செயல் தமிழ்நாடு அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பலாம்.

தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்றே காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது. தனிப்பட்ட முறையில் பேசும் போது அக்கட்சித் தலைவர்கள் இதைத் தான் சொல்கிறார்கள். இதனால் தான் சொல்கிறேன் ராகுல் காந்தியின் ஏஜெண்டு போல திருமாவளவன் செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது. வெளியே கூட்டணி இணக்கமாக இருப்பது போல ராகுல் காந்தி காட்டிக் கொண்டாலும் திரைமறைவில் இந்த வேலைகளைச் செய்து வருகிறார். இதுதான் அரசியல். ஒரு கை செய்வது மற்றொரு கைக்குத் தெரியாது. காங்கிரஸ் தான் திருமாவளவனை உசுப்பிவிடுகிறது. திமுக எம்பிக்களும் இதையே தான் சந்தேகிக்கிறார்கள்.

நாணய வெளியீட்டு விழா: நாணய வெளியீட்டு விழாவில் கூட ராகுல் காந்தியை அழைக்கவில்லையே.. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது திமுக - காங்கிரஸ் உறவில் திருமா உரசலை ஏற்படுத்தப் பார்க்கிறார் என்றே தோன்றுகிறது. 2026ல் திமுகவுக்கு எதிராக எடப்பாடிக்கு கீழ் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணையலாம். இன்னும் ஒரு வருடத்தில் இதற்கான மாற்றம் ஆரம்பிக்கலாம்.

தலித் மக்களை வைத்தும் தலித் வாக்கு வங்கியை வைத்தும் அரசியல் செய்யவே திருமாவளவன் விரும்புகிறார். அவருக்குத் தலித் முதல்வரைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. திருமாவளவனின் நச்சு அரசியலைப் பார்த்து திமுக விழித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். மகாராஷ்டிரா தேர்தலுக்கு பிறகும் பீகார் தேர்தலுக்கு முன்பும் பல அரசியல் மாற்றங்கள் நடக்கப் போகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+