Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: இப்படியே போனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோற்கும்- கே.சி.பழனிச்சாமி பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்றுபட்ட அதிமுக இல்லாவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோற்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் தோற்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற வலுவான தலைவர்கள் இல்லாமல் கட்சியில் இரட்டை தலைமை உள்ளதாலும் சொந்த கட்சியினரே அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. இது பாரம்பரியமாக கட்சியில் விசுவாசமாக இருப்போரை கலங்க செய்துள்ளது.

பழைய அதிமுக

பழைய அதிமுக

இதற்கு யார் காரணம், ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, பழைய படி அதிமுக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்த கட்டுக்கோப்பான ஒன்றுபட்ட அதிமுக தேவைப்படுகிறது.

அதிமுக தலைமை

அதிமுக தலைமை

தொண்டர்களால் மட்டுமே அதிமுக தலைமை உருவாக்கப்பட வேண்டும். ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட அதிமுகவாக இருக்க வேண்டும். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, தங்கமணி, வேலுமணி, கே பி முனுசாமி என ஆளாளுக்கு ஜாதி ரீதியில் அதிமுகவை கொண்டு வர பார்க்கிறார்கள். அதிலும் சசிகலா வந்தால் நான் இறந்துவிடுவேன் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி பேசுகிறார்.

ஒப்பிடுதலே தவறு

ஒப்பிடுதலே தவறு

இது முட்டாள்தனமான பேச்சு. அவருடைய ஒப்பிடுதலே தவறானது. வயதானதால் எல்லாரும் இறந்துவிடுவார்கள். இதில் என்ன புதுசு இருக்கிறது. யாரும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ மாட்டார்கள். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாக கே பி முனுசாமி நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக பேசியுள்ளார். நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் (2024) நடைபெறுவதற்கு முன்னர் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்ட அதிமுக உருவாக வேண்டும். அந்த ஒன்றுபட்ட அதிமுகவின் தலைமையை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கக் கூடாது. ஏன் என கேட்டீர்களானால், பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்கிறார். இன்னொரு பக்கம் தங்களுடன் அதிமுக இருப்பதாக பாஜக சொல்கிறது.

முதல்முறை

முதல்முறை

புதுவையில் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக வென்ற அதிமுக தற்போது தோல்வி அடைந்துவிட்டது. புதுவையை போல தமிழகத்திலும் அதிமுக தோற்க பாஜக முயற்சிக்கிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது. மதவாதம், ஜாதியம் வேண்டாம், ஒன்றுபட்ட அதிமுக தேவை. அதிமுகவின் தலைமை தொண்டர்களால் தேர்வு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளைத்தான் என்னிடம் பேசும் தொண்டர்கள் முன் வைக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல்

எனவே நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒன்றுபட்ட அதிமுக உருவாகும். இரு தலைமைகளுக்கிடையேயான போட்டியில் அதிமுக இரண்டாக பிளவுபட வாய்ப்பே கிடையாது. ஆனால் தலைமை பொறுப்பிலிருந்து ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. பாஜக எதிர்ப்பு, ஜாதி அற்ற அதிமுக, ஊழலற்ற அதிமுக, தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கக் கூடியதாகவே ஒரு தலைமை இருக்க வேண்டும். இதை யாருமே பின்பற்றுவதில்லை. தலைமை பொறுப்பை எனக்கு கொடுங்கள் என்கிறார் ஓபிஎஸ், வந்தா ராஜாவாதான் வருவேன் என்கிறார் சசிகலா, பிடித்து வைத்திருக்கும் நாற்காலியை நான் விடமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

கட்சி நலன்

கட்சி நலன்

எனவே இவர்களில் யாருமே கட்சியின் நலனுக்காகவோ, தொண்டர்களின் நலனுக்காகவோ, தமிழக மக்களின் நலனுக்காகவோ பாடுபடவில்லை. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இறப்பிற்கு பிறகு அந்த பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் கூட இவர்களுக்குள் கருத்தொற்றுமை இல்லை. பொதுக் குழுவை கூட்டவில்லை, உள்கட்சி தேர்தல் குறித்தும் அவர்கள் பேசவில்லை. இவையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் அதிமுக நாளுக்கு நாள் பலவீனமடைவதையே காட்டுகிறது. இதை தனக்கு சாதமாக்கிக் கொண்டு பாஜக வளர முயற்சிக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தோற்றாகிவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது அதிமுக வெல்லும் என்ற ஒரு நம்பிக்கையை கூட தொண்டர்களுக்கு கொடுக்காமல் இருக்கிறார். இப்படியே போனால் நகர்ப்புற தேர்தலிலும் அதிமுக தோற்கும் என்றார் கே சி பழனிச்சாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+