டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுக-அமமுக இணைப்பு பற்றி பரிசீலனை: கேபி முனுசாமி அதிரடி
சென்னை: அதிமுக- அமமுகவும் இணையுமா என கேள்விக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி பரபரப்பான பதிலை அளித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது விடுதலைக்கான கையொழுப்பத்தை மருத்துவமனைக்கே சென்று அதிகாரிகள் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று குறைந்தும் அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னை
அவர் சிறிது நாட்கள் பெங்களூரில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என தெரிகிறது. சசிகலாவை அவரது சகோதரர் திவாகரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் அழைத்து சென்றனர்.

அறிவுறுத்தல்
இவர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்துவிட்டாலும் ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இந்த நிலையில் சசிகலா ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் வெளியே வந்தது பெரும் கண்டனங்களை குவித்து வருகிறது.

துணை ஒருங்கிணைப்பாளர்
அதிமுக உறுப்பினர் அல்லாத ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி கூறுகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே.

சசிகலா அதிமுக கொடி
மற்றவர்கள் சுயநலத்திற்காக தான் பொதுச் செயலாளர் சொல்கிறார்கள். அதிமுக உறுப்பினரே அல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். மேலும் அதிமுகவும் அமமுகவும் இணையுமா என செய்தியாளர்கள் முனுசாமியிடம் கேள்வி எழுப்பினார்கள்.

தினகரன் முயற்சி
அதிமுகவுக்கு எதிராக செய்த துரோகங்களை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் தந்தால் அதிமுக அமமுக இணைப்பு குறித்து அதிமுக தலைமை பரிசீலனை செய்யும். பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சித்தார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் டிடிவி தினகரன் என்றார்.












Click it and Unblock the Notifications