இன்னிக்குனு பார்த்து நிதிஷ் குமாரை கேள்வி கேட்ட கி. வீரமணி! முதல்ல 5 வருடம் முதல்வராக பீகாரை ஆள்வாரா
சென்னை: ஜனநாயகத்தை காக்கும் முதல் கட்சியாக திமுக உள்ளது. இந்தியாவிற்கு முன்னுதாரணமான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.. அத்துடன், பீகாரில் 5 வருடங்கள் நிதிஷ்குமார் முதலமைச்சராக ஆட்சி புரிவாரா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பாஜக 89, ஐக்கிய ஜனதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இதனை தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது.. மாநிலத்தின் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ் குமார் பதவியை பெற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நிதிஷ்குமார் 5 வருடம் ஆட்சி புரிவாரா
ஆனால், 5 ஆண்டுகள் நிதிஷ்குமார் தொடர்ந்து பீகாரை ஆட்சி செய்வாரா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
"பீகார் தேர்தல் முடிவில் வாக்காளர்களும், கட்சிகளும் பெற வேண்டிய படிப்பினைகள் சிறப்பு கூட்டம்" சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்றது. இதில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார்..
அப்போது அவர் பேசியபோது, "இதுவரை இந்தியாவில் எத்தனையோ திருட்டுகளை பார்த்துள்ளோம். ஆனால், தற்போது வாக்கு திருட்டு என்ற வார்த்தையை இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறோம்.. இது தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள காலகட்டமாகும்..
அவசரம் காட்டப்படவில்லை
SIR வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அயோத்தி வழக்கில் நாள் தவறாமல் தினந்தோறும் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், SIR வழக்கில் மட்டும் அவசரத்தை காட்டவில்லை. மக்கள்தான் எஜமானர்கள் என்று அரசியல் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்று அவர்களுடைய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை விழுங்கும் வகையில் SIR கொண்டு வரப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் நடத்தப்பட்டிருக்கவே கூடாது. இதற்கு பிறகு SIR வழக்கில் தீர்ப்பு வந்தால், அதில் நியாயம் கிடைத்துவிடுமா என்ன? நிதிஷ்குமார் 10-வது முறையாக இன்று முதலமைச்சராகி உள்ளார்.. ஆனால், 5 வருடம் தொடர்ந்து ஆட்சி செய்வாரா? என்ற கேள்வி உள்ளது...
பிரதமர் அரசுக்கு மெஜாரிட்டி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அசாமில் மட்டும் ஏன் நடத்தப்படவில்லை? வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் பீகாரில் இந்த முறை கவனம் செலுத்தினார்கள்... தீபாவளி பரிசாக, GST விலை குறைந்ததாக அதிரடியாக அறிவித்தார்கள்.
பீகாரில் ஜெயிக்க வேண்டும் என்பது அரசியல் கட்டாயமாகும்.. காரணம், பிரதமர் அரசுக்கு பெரும்பான்மை இல்லை. பாஜக ஆட்சி தொடர முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவாக உள்ளனர். ஆனால், சந்திரபாபு நாயுடு எப்போது என்ன செய்வார் என்றே தெரியாது. அதனால் பீகாரில் பாஜகவிற்கு வெற்றி முக்கியமாக பார்க்கப்பட்டது.
அதனால்தான், தேர்தலில் பீகாருக்கு அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் 1 லட்சம் நபர்கள் வாக்காளர்களாக வரவழைக்கப்பட்டனர்.
அசைக்க முடியவில்லை
மாநில கட்சிகளை சார்ந்துதான் அகில இந்திய கட்சிகள் செயல்பட வேண்டிய நிலைமை உள்ளது. பீகாரில் கூட்டணிக்குள் இருந்த முரண்பாடுகள் தோல்விக்கு முக்கியப்பங்கு வகித்துள்ளது.
ஜனநாயகத்தை காக்கும் முதல் கட்சியாக திமுக உள்ளது. இந்தியாவிற்கு முன்னுதாரணமான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் சீட் கேட்காமல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு இயக்கம் திராவிட இயக்கம். கொள்கை கூட்டணியாக அமைந்துள்ளதால் 3 முதல் 4 தேர்தல்களில் எங்களை அசைக்க முடியவில்லை" என்றெல்லாம் கி வீரமணி பேசியிருக்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications