விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும்.. சர்காருக்கு கமல் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சர்கார் படத்துக்கு அதிமுகவினர் திடீரென கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு இன்று குவிந்து பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து பல ஊர்களில் படக் காட்சிகள் நிறுத்தப்பட்டன. பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பதட்டமாக உள்ளது.

Kamal extends his support to Sarkar

இந்த நிலையில் சர்கார் படத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

முறையாக சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பும், முட்டுக்கட்டையும் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த கமல்ஹாசன், கடுமையாக அரசை சாடினார். நாட்டை விட்டே வெளியேறப் போவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அதிமுகவினரால் சிக்கல் ஏற்பட்டுள்ள சர்காருக்கு கமல் ஆதரவு தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+