அந்த அன்பு இருக்கே.. அதுதான் சார் கடவுள்.. சாஹேத்தை நெகிழ வைத்த "விருமாண்டி".. உருக வைத்த கமல்ஹாசன்!
சென்னை: மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரசிகருடன் கமல்ஹாசன் உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தனது மகனுக்கு விருமாண்டி என பெயரிட்டுள்ளதாக ரசிகர் கூறியதை கேட்டு மனம் உடைந்து அழுதவாறே காணப்பட்டார் உலகநாயகன்.
Recommended Video
புற்றுநோய் எனும் கொடிய நோயுடன் போராடுவோரின் ஆசைகள், லட்சியங்களை நிறைவேற்ற பல தன்னார்வ அமைப்புகள் உள்ளன. அந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு விருப்பமான ஹீரோக்களை பார்க்க விரும்புவர்.
இன்னும் சிலர் ஒருநாள் முதல்வராக வேண்டும், ஒரு நாள் மாவட்ட ஆட்சியர், ஒரு நாள் காவல் துறை அதிகாரி என லட்சியங்களுடன் இருப்பர். இவற்றை அறியும் தன்னார்வல அமைப்புகள் அவர்களது கனவுகளை நிறைவேற்றி வருகிறது.

கமல்ஹாசன்
அந்த வகையில் சாகேத் என்பவருக்கு கமல்ஹாசன் என்றால் மிகவும் பிடிக்கும். சாகேத் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு ஸ்டேஜ் 3 ஆகும். எப்படியாவது கமல்ஹாசனுடன் பேச வேண்டும் என விரும்பினார்.

சந்தோஷம்
ரசிகரின் ஆசையை அறிந்த உலக நாயகன் கமல்ஹாசன் அவரது ஆசையை நிறைவேற்றினார். உடனே ரசிகரை தொடர்பு கொண்டார். ஜூம் வீடியோ காலில் வருவதாக கூறியிருந்தார். குறித்த நேரத்தில் வீடியோ காலில் வந்தார். வீடியோவில் கமல்ஹாசனை பார்த்தவுடன் சாகேத்திற்கு சந்தோஷம் உச்சத்திற்கு சென்றுவிட்டது.

சாகேத்
சாகேத்திற்கு மனைவி, மகன், கைக் குழந்தை உள்ளனர். கமலுடன் மிகவும் உற்சாகமாக பேசியிருந்தார் சாகேத். தனது மகனுக்கு உங்கள் படத்தின் பெயரான விருமாண்டி என்பதை வைத்துள்ளதாக கூறியதை கேட்ட கமல்ஹாசன் வாயடைத்து போய் உருக்கமான நிலைக்கு சென்று கண்கலங்கினார்.

அன்பு
மூளை புற்றுநோயால் அவதியடைந்த நிலையிலும் தன் மீது இத்தனை அன்பை வெளிப்படுத்துகிறாரே என்றும் அந்த ரசிகரின் நிலையை எண்ணியும் கமல் கண்ணீர்விட்டார். ரசிகரின் ஆசையை உலகநாயகன் நிறைவேற்றியது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications