பிரசாந்த் கிஷோரை 5 முறை சந்தித்த கமல்.... விறு விறு பணிகள்.. துருதுரு மக்கள் நீதி மய்யம்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பிரஷாந்த் கிஷோருடன் 5 முறை கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கடந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் கமல்ஹாசன் சற்று உற்சாக மனநிலையில் உள்ளார். ஆனால் அவரது கட்சி நிர்வாகிகள் பலர் தேர்தலில் பணத்தை பறிகொடுத்ததால் கட்சிப்பணிகளில் இருந்து மெதுவாக ஒதுங்கி வருகின்றனர்.
இதை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட கமல், தற்போது புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து வருகிறார். மேலும், அதிமுக பாணியை பின்பற்றி மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக உள்ள பெரும்பாலனவர்களுக்கு பொறுப்புகள் வழங்கவும் முடிவு செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கிளைகள்
திமுக, அதிமுகவை போல் கிராமங்களிலும் கிளையை நிறுவி அதற்கும் பொறுப்பாளர்களை நியமிக்க மக்கள் நீதி மய்யத்தில் தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஸ்பெலிஸ்ட் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்றி வருகிறார். அவரது டீம் முதற்கட்ட ஆய்வை தமிழகம் தழுவிய அளவில் முடித்துவிட்டது.

ஆட்சியமைப்பது
மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ரொம்வே தயங்கியுள்ளார். கமலுக்காக அவரை சந்திக்க சென்ற பிரதிநிதியிடம், மக்கள் நீதி மய்யம் உடனடியாக ஆட்சிக்கு வருவதெல்லாம் சாத்தியமில்லை எனவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தயங்கி ஒப்புதல்
பின்னர் எப்படியோ கமலுக்காக மக்கள் நீதி மய்யத்தை தமிழகத்தில் வலுப்படுத்த அவர் ஒரு வழியாக ஒத்துக் கொண்டாராம். இதனிடையே 5 முறை கமல்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

எங்களுக்கே தெரியாது
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் இது தொடர்பாக பேசிய போது, பிரசாந்த் கிஷோர் டீம் ஆய்வு நடத்துவது, எங்களுக்காக பணியாற்றுவது எங்களுக்கே தெரியாது. அந்தளவு யாரும் யூகிக்க முடியாத வகையில், பிக்பாஸ், சினிமா பணிகளுக்கு இடையேயும் கட்சியை வலுப்படுத்தி வருகிறார் தலைவர் கமல். மேலும் உடனடியாக நாங்கள் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் எங்கள் கட்சிக்கென்று எம்.எல்.ஏ.க்களையாவது பெறுவோமே என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications