Election-லிருந்து Escape சரி! 3000000 ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க கமல்? எதிர்ப்பார்ப்பில் மநீம
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அறிவித்த நிலையில், விருப்பமனுவுக்காக பெற்ற பணத்தை திருப்பி கொடுப்பது குறித்து கப்சிப் என இருந்து வருவது கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை கொண்டு கட்சி ஆரம்பித்தவர் மக்கள் நீதி மய்யம். தனது கட்சி குறித்தும் அரசியல் குறித்தும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் அவர் தொடர்ந்து பேசி வந்தார்.

கட்சி தொடங்கி , 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்த நிலையில் நல்ல வாக்கு சதவீதம் கிடைத்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கூட கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் நூலிழையில் வானதியிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென திமுகவுடன் கூட்டணியில் இணைந்தார். அப்போது திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது என்றும் தேர்தலில் போட்டியில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எனினும் அவருக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டை திமுக வழங்கியது. தற்போது 2026 சட்டசபை தேர்தலிலும் கமல் கட்சி திமுகவுடன் பயணிப்பதாக தெரிவித்திருந்தது. 6 தொகுதிகளை திமுகவிடம் கேட்ட நிலையில் திமுகவோ 2 தொகுதிகளை கொடுப்பதாக கூறியதாம்.
ஆனால் அந்த இரு தொகுதிகளும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என திமுக தெரிவித்ததாம். இதற்கு மறுப்பு தெரிவித்த மநீம, டார்ச்லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என கூறியிருந்தது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விருப்பமனுக்களை கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு தொகுதிக்கு ரூ 50 ஆயிரத்திற்கு கட்டணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் சீட் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த நிர்வாகிகள், நேர்காணலுக்கு அழைப்பார்கள் என காத்திருந்தனராம். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியில்லை என்றும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துவிட்டார்.
இதனால் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ந்து கமல்ஹாசனை எப்படி பாராட்டுவது என தெரியவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் திருமாவளவனோ, கமல்ஹாசனின் கட்சி போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனாலும் கமல் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை பெற்ற நிலையில், தேர்தலில் போட்டியிடாத போது அந்த விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி கொடுப்பது குறித்து கமல் எதையும் சொல்லவில்லை என்கிறார்கள்.
இது குறித்து ஆழ்வார்பேட்டை வட்டாரத்தில் கேட்ட போது, தேர்தலில் போட்டியிடுவதால் சீட் கிடைக்கும் என நம்பி 60-க்கும் மேற்பட்டோர் தலா ரூ 50 ஆயிரம் வரை (சுமார் 30 லட்சம்) பணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுள்ளனர்.
தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த நிலையில் அந்த பணத்தை நிர்வாகிகளுக்கு திருப்பி கொடுப்பதுதானே நியாயம்! ஆனால் அது குறித்து கமல்ஹாசன் எதையும் சொல்லவில்லை. தேர்தலில் போட்டியிடாததற்கு கட்சி நடத்தி என்ன பயன்? திமுக கூட்டணியில் இருப்பதால் கோவை தெற்கு பகுதியில் எப்படியும் மநீம போட்டியிட்டால் வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் பலர் இருந்தனர். ஆனால் அவர்களது நம்பிக்கையில் மண் அள்ளி போட்டுவிட்டார் கமல்ஹாசன் என்கிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications