சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்ம திருப்பம்.. கமலின் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி தெரியுமா? வெளியான தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் பிப்ரவரி 21ம் தேதி கூட்டணி அறிவிப்பை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என்று சொல்கிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் 3மாதங்களில் நடைபெற போகிறது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

அதிமுக பாஜக ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் போட்டியிடுகின்றன.

 தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

இதில் எந்த கட்சிகளுமே இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனாலும் கட்சிகள் அனைத்துமே தீவிர பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே ஒரு முறை தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்துவிட்டார்.

ஓய்வில் கமல்ஹாசன்

ஓய்வில் கமல்ஹாசன்

இப்போது கமல்ஹாசன் காலில் சிறுஅறுவை சிகிச்சை முடித்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசனிடம் தேர்தல் அறிவிப்பு வெளியிட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிட போகிறீர்கள்? என்று கேட்டார்கள்.

கூட்டணி அமைப்போம்

கூட்டணி அமைப்போம்

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். நல்லவர்களோடு கூட்டணி அமைப்போம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். அரசியலில் நல்லவர்களாக இருப்பவர்கள் வெற்றி பெறும் அளவுக்கு வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். அதுபோன்றவர்களுடன் நிச்சயம் கை கொடுப்போம் என்றார்.,.

மக்கள் ஏற்பார்கள்

மக்கள் ஏற்பார்கள்

அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறீர்களா? என்று அப்போது செய்தியாளர்கள் கேட்டதற்கு.
தமிழக மக்கள் புதிய மாற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டையும், யாருடன் கூட்டணி என்பதையும் விரைவில் அறிவிப்போம் என்று கூறியிருந்தார்.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்று எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாக எழுந்தது. இந்நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் பிப்ரவரி 21ம் தேதி கூட்டணி அறிவிப்பை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

English summary
It has been reported that the makkal neethi maiam is to join the Aam Aadmi Party in the alliance. It has been reported that Kamal Haasan is set to announce the alliance on February 21. It is said that Delhi Chief Minister Arvind Kejriwal will attend the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X