கனல் கண்ணன்.. முடிஞ்சா தொட்டுப்பார்.. "மத மோதலை உருவாக்க பார்க்கிறார்".. போலீசுக்கு போன த.பெ.தி.க
கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிட கழகம் போலீசில் புகார் தந்துள்ளது
சென்னை: மதமோதலை உருவாக்கும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணம் நிறைவு விழாவில் பேசிய, கனல் கண்ணன், பேசியது சர்ச்சையை உண்டுபண்ணி வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் கோயில் எதிரே உள்ள கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை (பெரியார் சிலை) என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

மதுரவாயல்
சென்னை மதுரவாயலில் பிரச்சாரப் பயணம் நிறைவு கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசம்போது, ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருந்தார். கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் திகவினர் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர்.

முடிஞ்சா தொட்டுப்பார்
அதேபோல, அண்ணல் சிலையை உடைப்பவர்களைத்தான் திராவிட மாடல் கண்டுகொள்ளாது. பெரியார் சிலையை உடைக்கச் சொல்லியுள்ள இவரையாவது கைது செய்யுமா? என்றும், முடிஞ்சா சிலையை தொட்டுப் பாரு என்றும் கனல் கண்ணனுக்கும் நேரடி சவால்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை கமிஷனர் ஆபீசில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது..

எழுச்சி நாள்
பிறகு, இந்த கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன், செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஸ்ரீரங்க கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என்று கனல் கண்ணன் பேசியிருக்கிறார்.. ஏற்கெனவே 2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால்தான் அந்த கலவரம் உண்டானது.

கனல் கண்ணன்
அந்த சம்பவம் முடிந்து, 15 வருடங்களான நிலையில், இப்போது மறுபடியும் மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல்கண்ணன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது... அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தைத் தூண்டும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்... இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் அளித்துள்ளேன்"என்றார்.

திராவிடர் கழகம்
அதேபோல, திராவிடர் கழகத்தை சேர்ந்த துரை.அருண் என்ற வழக்கறிஞரும், நம்முடைய ஒன் இந்தியா இணையதளதில் வெளியாகியிருந்த கனல் கண்ணன் செய்தியின் அடிப்படையில், சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தந்துள்ளார்.. அந்த மனுவின் சுருக்கம் இதுதான்: "நான் கடந்த 13 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன்.. மேலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகளுக்காக வழக்கு நடத்தி வருகிறேன்,

நடிகர் கனல் கண்ணன்
இன்று காலை One India பத்திரிகை செய்தியில் மதுரவாயலில் இந்து முன்னணி சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், "ரங்கநாதர் கோவிலில் தினமும் ஒரு லட்சம் பேர் சாமி கும்புடறான்.. அதற்கு எதிரே உள்ள பெரியார் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று நடிகர் கனல் கண்ணன் தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு எதிராக, தீய எண்ணத்துடன், கலவரத்திற்கு வித்திடும் வகையில் பேசியுள்ளார்.. அதை பார்த்ததும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்..

சமூக பதட்டம்
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக வேலைவாய்ப்பு, பொருளாதார மேமம்பாட்டிற்கு போராடிய ஒரு மகத்தான தலைவர் தந்தை பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சு, தமிழ்நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ரங்கநாதர் கோவிலுக்கு செல்பவர்களை தந்தை பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று தூண்டுகிறார் நடிகர் கனல் கண்ணன். எனவே, சமூக பதட்டத்தை உருவாக்கும் கனல் கண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். கனல் கண்ணன் மீது அடுத்தடுத்த புகார்கள் குவிவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications