"வெறி".. கனிமொழிக்கு வந்த டென்ஷன்.. பின்னாடியே கொந்தளித்த வைகோ, வெங்கடேசன்.. அனலடிக்கும் "ஜிப்மர்"
கனிமொழி எம்பி ஜிப்மர் மருத்துவமனை ஹிந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகளும், போராட்டத்தை அறிவித்துள்ளன.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து பதிவேடுகளிலும் இந்தி கட்டாயம் என்று ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்... இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதலில் இதற்கு குரல் கொடுத்துள்ளவர் திமுக எம்பி கனிமொழிதான்.. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மையை மாற்றுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்னையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதல்ல" என்று பதிவிட்டிருந்தார்.

கனிமொழி
இது தொடர்பாக ஒரு அறிக்கையும் விடுத்துள்ளார்.. அதில், "மத்திய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? மத்திய அரசு திணிக்க முயலும் இந்தி வேலை இல்லா திண்டாட்டத்தை தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூக பிரச்சினையை தீர்க்குமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதல்ல" என்று காட்டமாகவே கூறியுள்ளார்.

போராட்டம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து, மதிமுக சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஜிப்மர் நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.. அதேபோல, பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜிப்மர்
புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி, ஒரு கடிதமே எழுதிவிட்டார்.. அதில், "இது இந்தியை திணிக்கிற அப்பட்டமான நடவடிக்கை ஆகும். சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது "இந்தி மட்டும்" என்ற உறுதி மொழியை தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது? என்னைப் பொறுத்த வரையில் ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள இந்த பிரிவுகளுக்கு "இந்தி செல்" என்ற பெயரே சரியில்லை.
Recommended Video

வெங்கடேசன்
அலுவல் மொழி அமலாக்க குழு என்ற வகையில் "OLI Cell" என்றுதான் இருந்திருக்க வேண்டும். உண்மையில், ஒன்றிய அரசின் துறை/ நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழில்தான் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். ஆகவே இந்த சட்ட மீறல் சுற்றறிக்கை எண் No/OL imple/ 2022 திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், இதுநாள் வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் கோப்புகள் எழுதப்படும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது இயக்குநரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஜிப்மருக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் தமிழ் அல்லது ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்கள்.

ரவிக்குமார், சிவா
இந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்குத் துணை போகும் ஜிப்மர் இயக்குநரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக அந்த சுற்றறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.. இதேபோல, விசிகவின் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ரவிக்குமார், புதுச்சேரி சட்டமன்ற எதிர் கட்சித்தலைவரும்... திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா ஆகியோரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

இன்றே போராட்டம்
புதுவை மாநில காங்கிரசும் ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது... மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், ஜிப்மரில் இந்தி திணிப்பை கண்டித்து காங்கிரஸ் தனியாகவும், கூட்டணி கட்சிகளுடனும் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.. இப்படி போராட்டங்களை ஒவ்வொரு கட்சிகளும் அறிவித்து வரும் நிலைமையில், திமுக முந்திக் கொண்டுவிட்டது.. இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனை எதிரே புதுவை மாநில திமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் இன்று குதித்துவிட்டது.. இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி விவகாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
-
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications