சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதை தவிர்க்க வேண்டும் - கனிமொழி வேண்டுகோள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்குள்ளாகினர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கனிமொழி எம்பி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்த நிகழ்வு லிம்கா கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 72 விமானங்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். விமானப் படை வீரர்கள் வானில் பல வர்ண ஜாலங்களை நிகழ்த்தினர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வான் சாகசங்களை கண்டு வியந்தனர்.
இந்நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்ததால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடந்து செல்வதற்கு கூட மக்கள் சிரமப்பட்டனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
கூட்ட நெரிசலால் சுமார் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன் கூட வர முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். பலர் மயங்கிய நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்கள் கிடைக்கவில்லை. வந்த ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கின. தெற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டினர்.
இச்சம்பவத்துக்கு எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்து உயிரிழந்த 5 பேரின் மரணத்துக்கு எம்பி கனிமொழி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications