பலாத்காரம்.. விருதுநகரில் கைதான திமுக பிரமுகர்! யாரா இருந்தா என்ன? தண்டிக்க வேண்டும்: கனிமொழி அதிரடி
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டது ஆறுதலை தருகிறது என திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு மேலரத வீதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர்.
அவ்வாறு ஒரு நாள் இருவரும் தனிமையில் இருந்த போது அந்த பெண்ணுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்ததை ஹரிஹரன் வீடியோ எடுத்தார். இதையடுத்து தனது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் என 6 பேருக்கு அந்த வீடியோவை காட்டியுள்ளார்.

22 வயது பெண்
இதையடுத்து அந்த வீடியோவை வைத்து 22 வயது இளம்பெண்ணை 7 பேரும் மாறி மாறி கடந்த 8 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. நாளுக்கு நாள் இவர்களின் தொல்லையை தாங்க முடியாத அந்த பெண் தன் வீட்டருக்கே உள்ள மாடசாமி என்பவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

7 பேர் பலாத்காரம்
அவர் காப்பாற்றுவார் என நினைத்த நிலையில் அவரும், அந்த வீடியோவை 7 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். இப்படியே மாதங்கள் கடந்தும் இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததை அடுத்து அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார்.

8 பேர் கைது
அதன்பேரில் போலீஸார் திமுக நிர்வாகிகளான ஹரிஹரன், ஜீனைத் அகமதுஸ பிரவீன், மாடசாமி, 4 பள்ளி மாணவர்கள் (10, 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்) ஆகியோரை கைது செய்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை கண் முன் கொண்டு வரும் இந்த மாபாதக செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கனிமொழி ட்வீட்
அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக பிரமுகர் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் மீதும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது கனிமொழி குரல் கொடுத்திருந்தார். அது போல் தற்போது விருதுநகர் விவகாரத்தில் தனது சொந்த கட்சியினரே ஈடுபட்ட போதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் பாகுபாடின்றி தனது கண்டனத்தையும் வரவேற்பையும் பதிவு செய்துள்ளார்.

சாத்தான்குளம்
இதே போல் சாத்தான்குளத்தில் 2018 இல் லாக் அப்பில் மரணமடைந்த ஜெயராஜ், பெனிக்ஸ் சம்பவத்தில் கொதித்த கனிமொழி, அண்மையில் திமுக ஆட்சியில் வாழப்பாடியில் போலீஸாரால் தாக்குதலுக்குள்ளாகி தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவத்திலும் கோபத்தை கொப்பளித்தார். எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறு என்றால் அதை தட்டி கேட்கும் போக்கையே கனிமொழி கடைப்பிடித்து வருவதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications