மோடி எப்படி ஜெயிப்பாரு? பிரசாந்த் கிஷோரை தண்ணி குடிக்க வைத்த கரண் தாப்பர்.. திமுக சொன்னதை பாருங்க
சென்னை: பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த வீடியோவை திமுக மூத்த நிர்வாகிகள் பகிர்ந்து வருகின்றனர்.
2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், என்னைப் பொறுத்த வரையில், நான் சொல்ல போகும் பதில் சில சமயங்களில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன். கடந்த ஐந்து மாதங்களாக, நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்தாலும், மோடி தலைமையிலான பாஜக திரும்பி வருவதாகத் தெரிகிறது. கடந்த 5 மாதங்களாக அதுதான் நிலவரம்.

அது அப்படியே திடீரென மாற்றம் அடையாது. மோடிதான் திரும்ப வரப்போகிறார். கடந்த தேர்தலின் அதே எண்ணிக்கையை அவர்கள் பெறலாம் அல்லது அதைவிட சற்று சிறப்பாக செயல்படலாம்.
இதுதான் முடிவாக இருக்க போகிறது. நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர் மோடி மீதும் கோபம் இருந்தால் ஆட்சி இருக்கும். ஆனால் அந்த சூழ்நிலை இப்போது இல்லை.
மோடிக்கு எதிராக மக்களிடம் மாற்றுக்கருத்து இருக்கிறதா என்பதைப் பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. சில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யலாம். ஆனால் மோடிக்கு எதிரான அலை இல்லை. இதுவரை, மோடிஜி மீது மக்களிடையே பரவலான கோபம் இருப்பதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் முன்பை விட கூடுதல் இடங்களை கூட பெற்று அவர்கள் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
கரண் தாப்பர் கேள்வி: பிரதமர் மோடிதான் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில் அவரிடம் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினீர்கள், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வேரோடு அறுக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால் இரண்டிலும் காங்கிரஸ் வென்றது.
கரண் தாபர் அவர்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட பிரஷாந்த் கிஷோர்.
— Saravanan Annadurai (@saravofcl) May 23, 2024
இனி எங்கேயும் சென்று பாஜக 300 இடங்களில் வெல்லும், மோடி தான் அடுத்த பிரதமர் என சொல்லுவாரா பார்ப்போம்.
“கோடி மீடியா” என ஏன் சொல்லுகிறோம்? இப்படியொரு கேள்வியை 300 இடங்கள் என்னும் பொழுது கேட்டார்களா? #ByeByeModi pic.twitter.com/PbBTqbE7cE
இப்போது பாஜக வெல்லும்.. மோடி வெல்ல வாய்ப்புள்ளது என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கரண் தப்பார் கேட்டுள்ளார். இதற்கு கோபம் அடைந்த பிரசாந்த் கிஷோர்.. கடுப்பாகி உங்களிடம் ஆதாரம் இருக்கா.. வீடியோ இருக்கா என்று மீண்டும் மீண்டும் சொல்லி உள்ளார்.
இதையடுத்து பிரசாந்த் கிஷோர் பேசிய பேட்டிகளை தேதி வாரியாக கரண் தாப்பர் குறிப்பிட்டு அதை காண்பித்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோவை திமுக மூத்த நிர்வாகிகள் பகிர்ந்து வருகின்றனர்.
சரவணன்: திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள போஸ்டில், கரண் தாபர் அவர்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட பிரஷாந்த் கிஷோர்.
இனி எங்கேயும் சென்று பாஜக 300 இடங்களில் வெல்லும், மோடி தான் அடுத்த பிரதமர் என சொல்லுவாரா பார்ப்போம். "கோடி மீடியா" என ஏன் சொல்லுகிறோம்? இப்படியொரு கேள்வியை 300 இடங்கள் என்னும் பொழுது கேட்டார்களா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications