அப்போ எனக்கு 10 வயசு இருக்கும்! மேல்மருவத்தூர் அருகே கார் பழுதாகி நின்றது! -கார்த்திகேய சிவசேனாபதி
சென்னை: பங்காரு அடிகளார் மறைந்த நிலையில் அவரை முதல் முறையாக தாம் எப்போது பார்த்தேன் என்பதையும் அதற்கான சூழல் எப்படி அமைந்தது என்பது குறித்தும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சுவாரஸ்ய பிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார்.
கார் பழுது: ''1980 களில் சுமார் எனக்கு 10 வயது இருக்கும் அம்மா, அப்பா, நான் தம்பி அத்தை பொண்ணு அக்கா என 5 பேரும் ஒரு (மோரிஸ் மைனர்) மகிழுந்தில் எங்கள் கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்படிச்சென்று கொண்டிருக்கும் போது மேல்மருவத்தூர் அருகே சென்ற பொழுது நாங்கள் சென்ற மகிழுந்து பழுதானது. பின்பு பழுது நீக்கும் பணிமனையில் வண்டியை விட்டு விட்டு அக்காலகட்டத்தில் அங்கு தங்குவதற்கு எந்த வசதிகளும் இல்லாத காலகட்டம்.''

பங்காரு அடிகளார்: ''இன்று போல் அல்லாமல் அந்தச் சாலைகளின் இரண்டு பக்கமும் பனை மரங்களும், ஒரு வழி சாலையாகத் தான் இருக்கும். இன்று இருக்கக்கூடிய சென்னை -திண்டிவனம் சாலையை நாம் கனவில் கூட அன்று கண்டிருக்க முடியாது. பங்காரு அடிகளார் அவர்களுக்கு தாத்தாவை நன்கு தெரியும் என்று எனது தந்தை கூறியதால் அருகில் இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று அவரை சந்தித்தோம். இரவு 9 மணிக்கு சென்ற எங்களை வரவேற்று, அவருடைய வீட்டுக்கு அருகே இருந்த விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்தார்.''
மேல்மருவத்தூரில் டிஃபன்: ''அடுத்த நாள் காலை எழுந்து நாங்கள் எல்லாம் அவருடன் சிற்றுண்டி உண்டு விட்டு காலை சுமார் 11 மணிக்கு எங்களுடைய மகிழுந்து பழுது பார்க்கபட்டு பயணத்திற்கு தயாரானது. மறுபடியும் அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்று சென்னைக்கு கிளம்பினோம். இதை எதற்காக இப்பொழுது குறிப்பிடுகிறேன் என்றால் இப்படி ஒரு சாதாரண மனிதராக எந்த விதமான பாரபட்சமின்றி ஆண், பெண் மற்றும் சாதி ,மத பேதமின்றி ஒரு புதுமையான வழிபாட்டு முறையை உருவாக்கியவர் அடிகளார். ''
அற்புதமான வழிபாட்டு முறை: ''கோயில் எல்லோரும் கருவறைக்குள் செல்ல முடியாது என இருந்தகாலகட்டத்தில், யார் வேண்டுமானாலும் சென்று அம்மனை வழிபட முடியும் என்ற அற்புதமான ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கியவர் அடிகளார் அவர்கள். அவருடைய மறைவுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.''
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications