அதிமுக இனி அவ்ளோ தான்.. காங்கிரஸுக்கு 5 அமைச்சர்கள்! தன் பங்குக்கு துண்டு போட்ட கார்த்தி சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசு கிடையாது. அவர் ஐந்து ஆண்டு காலம் சுமுகமாக ஆட்சியை நடத்துவார் எனவும், காங்கிரஸில் உள்ள ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தால் மகிழ்ச்சி அடைவோம் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ள நிலையில், 5 அமைச்சர்கள் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தமிழக அரசு மதுபான கடையின் வீச்சை குறைப்பதை வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை.

Karti Chidambaram

அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றது அதன் எதிர்காலத்திற்கு கேள்விக்குறி தான். எடப்பாடி தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்ததால், அதிமுக உடையலாம், பிற கட்சியுடன் இணையலாம், தலைமை மாறலாம். அதிமுகவில் மாற்றங்கள் வருவது உறுதி என கணித்தார்.

கார்த்தி சிதம்பரம்

தொடர்ந்து, திமுக ஒரு வலுவான கட்சி. திமுகவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று கூற முடியாது. அதற்கு வலுவான அரசியல் தலைமை உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் திமுக பிரதான கட்சியாக செயல்படும். பிரதமர் மோடி மக்களிடத்தில் 7 வேண்டுகோளை வைத்துள்ளார். இதற்கான காரணத்தை பிரதமர் மோடி பாராளுமன்றத்தை கூட்டி தெரிவிக்க வேண்டும். அல்லது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

விஜய் அரசு

இதுவரை அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் உள்ளது. பிரதமர் கூறுவது மர்மமாக உள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்திய அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டினார். விஜய் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசு கிடையாது. அவர் ஐந்து ஆண்டு காலம் சுமுகமாக ஆட்சியை நடத்துவார். விஜயையோ தமிழக வெற்றி கழகத்தையும் தவிர்த்து விட்டு வேறு யாராவது ஆட்சி நடத்தலாம் என்றால் அது நடக்காது என உறுதிப்படுத்த தெரிவித்தார்..

விஜய் அமைச்சரவை

காங்கிரஸில் உள்ள ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்தால் மகிழ்ச்சி அடைவோம்.
வரும் பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தமிழக வெற்றி கழகம் கூட்டணி தொடரும்" என கார்த்தி ப. சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.

மாணிக்கம் தாகூர்

முன்னதாக தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என எம்பி மாணிக்கம் தாகூர். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்," 2026 தேர்தலுக்கு முன்பே திமுக "ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.

காங்கிரஸ் அமைச்சர்கள்

ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய TVK தலைவர் விஜய் அவர்கள் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+