சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து.. திடீரென புகார் கொடுத்த கரு நாகராஜன்.. எதுக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு நாகராஜன் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பாஜக வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து புகார் கொடுத்தார்.

இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறன. அவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டுள்ளனர் என்று கரு.நாகராஜன் குற்றம்சாட்டினார்.

தீ விபத்து

தீ விபத்து

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிரே பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்ந்த அஸ்வதமன் அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள அறைகளில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த அலுவலகத்தில் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு நாகராஜன், பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்தனர்.

போலீஸ் கமிஷனரிடம் புகார்

போலீஸ் கமிஷனரிடம் புகார்

பாஜக வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கரு நாகராஜன் கூறியதாவது:- நேற்று நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்ந்த அஷ்வதமன் அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம், அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய ஆவணங்கள்

முக்கிய ஆவணங்கள்

எதோ ஒரு ரசாயனத்தின் மூலம் தீ வைக்கப்பட்டுள்ளது,. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் பெரிய அளவில் சேதமில்லை. முக்கிய ஆவணங்கள் எரிந்து போகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது ஆனால் இரண்டு அறைகளிலும் இருந்த பர்னிச்சர்கள் மட்டும் அடிப்படை பொருட்கள் சேதமாகி உள்ளன.

தொடர் சம்பவம்

தொடர் சம்பவம்

திமுக ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது, அவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டுள்ளனர். சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து இந்த சதிச்செயல் செத்தவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். எனவே உறுதியாக இச்செயலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உறுதி அளித்துள்ளார் என்று கரு நாகராஜன் தெரிவித்தார்.

English summary
Tamil Nadu BJP general secretary Karu Nagarajan met the Chennai police commissioner and lodged a complaint about the fire at the BJP prosecutor's office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X